"ஒரு தொற்றுநோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், அதைக் குறைப்பது எளிதான விஷயம் இல்லை" என பிரிட்டனின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் எச்சரிக்கிறார்.
இன்னொரு பெருந்தொற்று பரவல் ஏற்படப்போவது உறுதி என்றும், அதைத் தவிர்க்க முடியாது என்றும் பிரிட்டனின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் கூறியுள்ளார். மேலும், பிரிட்டனில் வரவிருக்கும் அரசு தயார்நிலையில் இருப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
தொற்றுப்பரவல் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிய சிறந்த கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவது மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று என வாலன்ஸ் வலியுறுத்தி இருக்கிறார். 2021ஆம் ஆண்டில் G7 தலைவர்களிடம் தான் கூறியதைப் போல விரைவான நடவடிக்கை தேவை எனவும் தெரிவித்திருக்கிறார்.
undefined
மனித மலத்தை ரூ.41,000 க்கு வாங்கும் கம்பெனி! ஒரு வருட டீலுக்கு ரெடியா இருந்தா ரூ.1.4 கோடி!
விரைவாக நோயைக் கண்டறியும் வசதி, தடுப்பூசி மற்றும் சிகிச்சைகளுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். இதன் மூலம் கோவி-19 பெருதொற்று பரவலின்போது ஏற்பட்டது போன்ற கடுமையான பாதிப்பைத் தடுக்க முடியும் என்று வாலன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது செய்யக்கூடியதுதான் என்றாலும் இதற்கு குறிப்பிடத்தக்க அளவு சர்வதேச ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
"ஒரு தொற்றுநோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், அதைக் குறைப்பது எளிதான விஷயம் இல்லை" எனவும் வாலன்ஸ் எச்சரிக்கிறார்.
தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் முன்முயற்சியைக் குறிப்பிட்ட அவர், உலக நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நேர்மறையான நடவடிக்கைகளில் ஒன்று என்றார். ஆனால், போதுமான கவனம் செலுத்தப்படுவதாகத் தோன்றவில்லை என்றும் அவர் கூறினார்.
நோயைக் கண்டறிவதில் உள்ள சிக்கல்களையும் குறிப்பிட்ட வாலன்ஸ், அதற்கு ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
எல்லா வேலையையும் AI செய்யும்... பொழுது போகாதவர்கள் தான் வேலை செய்வார்கள்!: எலான் மஸ்க்