செலவே இல்லாமல் மருத்துவம் படிக்கலாம்! 1 பில்லியன் டாலர் நன்கொடை பெற்ற நியூயார்க் மருத்துவக் கல்லூரி!

By SG Balan  |  First Published Feb 28, 2024, 9:36 AM IST

தற்போதுள்ள அனைத்து நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் அவர்களின் 2024 வசந்த கால செமஸ்டர் கட்டணங்கள் திருப்பிச் செலுத்தப்படும். ஆகஸ்ட் முதல் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நியூயார்க் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி ஒரு பணக்காரரிடம்  இருந்து 1 பில்லியன் டாலர் நன்கொடை பெற்றுள்ளது. இதனால் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்திருப்பதாக கல்லூரியின் தாய் நிறுவனமான நியூயார்க் மெடிக்கல் ஸ்கூல் தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடை அமெரிக்காவில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் பெற்றிருக்கும் மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்றாகும். இதன் மூலம் கிட்டத்தட்ட 60,000 டாலர் மதிப்பிலான நிலுவையில் உள்ள வருடாந்திர கல்விக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

மருத்துவப் பள்ளி மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனையான மான்டிஃபியோர் மருத்துவ மையம், நியூயார்க்கின் பிராங்க்ஸில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சுகாதார நடவடிக்கைகள் மிக மோசமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

"ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி, ஐன்ஸ்டீன் அறக்கட்டளை அறங்காவலர் குழுவின் தலைவரும் மான்டிஃபியோர் ஹெல்த் சிஸ்டம் குழு உறுப்பினருமான ரூத் எல். கோட்டெஸ்மேன், எட்.டி., ஆகியோரிடமிருந்து ஒரு பரிசைப் பெற்றுள்ளது" என்று திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலசையில் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

"இந்த வரலாற்றுப் பரிசு - நாட்டின் எந்த மருத்துவப் பள்ளிக்கும் செய்யப்பட்ட மிகப்பெரிய பரிசு - ஐன்ஸ்டீன் கல்லூரியில் உள்ள எந்த மாணவரும் மீண்டும் கல்விக் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது"  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அனைத்து நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் அவர்களின் 2024 வசந்த கால செமஸ்டர் கட்டணங்கள் திருப்பிச் செலுத்தப்படும். ஆகஸ்ட் முதல் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் கோட்ஸ்மேனும் அவரது மனைவியும் ஏற்கெனவே அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்த மருத்துவப் பள்ளிக்கு குறிப்பிடத்தக்க நன்கொடையாளர்களாக இருந்து வந்தனர். கோட்ஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவப் பிரிவில் பேராசிரியராக இருந்தார்.

நிலவில் போராடி தாக்குப்பிடித்த ஒடிசியஸ் லேண்டர்... கடைசி நிமிடத்தில் நடக்கப்போவது என்ன?

click me!