குவைத் நாட்டில் வேலை விசா தொடர்பான புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன
வெளிநாட்டில் வேலை பார்த்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்று வெளிநாட்டு வேலை மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு பணம் சம்பாதித்து விட்டு மீண்டும் நம் நாட்டிற்கே திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தில் பலரும் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, லண்டன், கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலும், குவைத், துபாய், சவுதி, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலும் அதிகளவில் இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அப்படி வெளிநாட்டில் தங்கி வேலை பார்க்கும் பல நாடுகளும் வேலை விசாவை வழங்குகின்றன. அதற்கு குறிப்பிட்ட ஆண்டுகள் காலக்கெடு இருக்கும். காலக்கெடு முடிந்த உடன் விசாவை மீண்டும் புதுப்பித்து காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி! எதற்காக தெரியுமா?
இந்த நிலையில் குவைத் நாட்டில் வேலை விசா தொடர்பான புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குவைத் நாட்டிற்கான வேலை விசாவில் பெயர், முகவரி, பிறந்த தேதி, சொந்த நாட்டின் பெயர் போன்ற விவரங்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனில் முதலில் Ashal Service மூலம் விசாவை ரத்து செய்ய வேண்டும். வேலை விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து 2 வாரங்களுக்குள் விசாவை ரத்து செய்ய வேண்டும். பின்னர் அந்த நாட்டின் உள்துறை அலுவலகத்திற்கு சென்று புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களுடன் விண்ணப்பிக்கலாம். பொது மனிதவள ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகம் கூட்டாக இணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. விசா மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வேலை விசா வழங்குவது தடை செய்யப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது தவிர்க்கப்படும்.
மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வேலை விசாக்களை ரத்து செய்ய ஆன்லைன் வசதியையும் குவைத் அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் போர்டல் மூலம் பயனர்கள் இந்தச் சேவையை அணுகலாம். ஆன்லனில் "வேலை விசாவை ரத்துசெய்தல்" விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தேவையான விண்ணப்ப விவரங்களை வழங்கி சமர்ப்பிக்க வேண்டும். விசா ரத்துச் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதையும் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.