சிங்கப்பூரில் டெங்கு பரவல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) தெரிவித்துள்ளது. உடனடியாக, பொதுமக்கள் கொசுப் பெருக்கத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது வரை சுமார் 6200பேர், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய சுற்றுப்புற வாரியம் (NIA) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக என் ஐ ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு கொசு பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் டெங்கு பரவல் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பெருகி வரும் ஏடிஸ் கொசுக்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் “டெங்குப் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும், உடனடியாக தேவையான கொசு ஒழிப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
DENV-1 எனப்படும் டெங்கு கிருமி வகை கடந்த இரு மாதங்களாக அதிகமாகப் பரவி வருவதாகவும், இதற்கு முன்னர் பல இடங்களில் பரவிய DENV-3 வகை கிருமியை அது முந்திவிட்டதாகவும் எஐஏ தெரிவித்துள்ளது.
வாழ்க்கைக்கு வழிகாட்டும் மனநலக் கல்வி! அதை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் அரசு!
கடந்த ஜூலை மாதம் வரையில் DENV-1 வகைக் கிருமி பரவல் 55 சதவீதமாக உள்ளது. மேலும், DENV-3 கிருமி பரவல் சம்பவங்களின் விகிதம் 17 சதவீதமாக உள்ளது. இதுவரை 6,200 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
undefined