நேபாளத்தில் தொடரும் வன்முறை..! ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ராணுவம்..

Published : Sep 10, 2025, 01:35 PM IST
nepal protest

சுருக்கம்

நேபாளத்தில் பொதுமக்களின் போராட்டம் வன்முறையாக மாறி நாடாளுமன்றம் தீ வைத்து கொளுத்தப்பட்ட நிலையில் புதிய அரசு அமையும் வரை ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்கும் ராணுவம்...

நேபாள அரசு, யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக செயலிகளுக்கு செப்டம்பர் 4, 2025 அன்று தடை விதித்தது, ஏனெனில் இவை அரசின் பதிவு விதிகளைப் பின்பற்றவில்லை என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த இளைஞர்கள் இது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கருதப்பட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்றபோது, போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு, ரப்பர் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுமார் 19 பேர் உயிரிழந்தனர், 200 முதல் 400 பேர் வரை காயமடைந்தனர். மேலும் ஒரு முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரிக்கப்பட்டார், நாடாளுமன்றத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்து கொளுத்தினர். வன்முறையை அடக்க ராணுவம் களமிறக்கப்பட்டு, காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஜனாதிபதி, மற்றும் சில அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகத் தடை விலக்கப்பட்டாலும், போராட்டங்கள் தொடர்ந்து, மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்தில் ஏற்பட்ட வன்முறையால் மனம் வருந்துவதாகவும், அமைதி மற்றும் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்திய அரசு, நேபாளத்தில் நிலையற்ற சூழல் காரணமாக இந்தியர்கள் அங்கு பயணிக்க வேண்டாம் எனவும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியது. காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டு, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. புதிய ஆட்சி அல்லது இடைக்கார அரசாங்கம் அமையும் வரை ராணும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. தற்போது தேசிய பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள நேபாள ராணுவம் (NA) இன்று மாலை 5:00 மணி வரை தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது, அதே நேரத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?