Russia Ukraine Crisis: உக்ரைனுக்கு நேட்டோ படைகளை நேரடியாக அனுப்ப முடியாது... நேட்டோ அமைப்பு விளக்கம்!!

By Narendran S  |  First Published Feb 24, 2022, 8:19 PM IST

உக்ரைனுக்கு நேரடியாக நேட்டோ படைகளை அனுப்ப முடியாது என நேட்டோ அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும் நேட்டோ தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உக்ரைனுக்கு நேரடியாக நேட்டோ படைகளை அனுப்ப முடியாது என நேட்டோ அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும் நேட்டோ தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்  எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, இன்று அதிகாலை போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா இணையவழி தாக்குதலையும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைன் பகுதிகள் முழுவதிலும் வெடி குண்டுகள் மழை பொழிகிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் உக்ரைனுக்கு நேரடியாக நேட்டோ படைகளை அனுப்ப முடியாது என நேட்டோ அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும், உக்ரைன் படைகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். நேட்டோ தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டிக்கிறோம். ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை சீர்குலைத்துவிட்டது என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டுக்குள் தங்களது படைகளை அனுப்பும் எந்த திட்டம் தற்பொழுது வரை இல்லை.

நோட்டோ படைகள் உக்ரைனுக்குள் செல்லவில்லை. நோட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. ஆனால், நோட்டோ ஆயுத உதவி செய்யவில்லை. உக்ரைன் நோட்டோவில் இல்லை என்பதால் உக்ரைனுக்கு நோட்டோ  ஆதரவாக  இராணுவ உதவிகளை தற்போது வரை செய்யவில்லை. ஆனால் படைகள் நட்பு நாடுகளில் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படைகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். நேட்டோ தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைனுக்கு நேரடியாக நேட்டோ படைகளை அனுப்ப முடியாது. ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

click me!