
Russia Ukraine Crisis :உலக நாடுகள் இணைந்துள்ள நேட்டா அமைப்பதில் உக்ரை இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர்தாக்குதலை தொடங்கியுள்ளது.உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதை அடுத்து,ரஷ்ய இராணுவ படைகள் உக்ரைனில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளது.கிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வழிகிறது.
உக்ரைன் தலைநகர் கீவியில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.மேலும்அங்குள்ள மக்கள் பிற நகரங்களுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர்.மெட்ரோ நிலையங்கள்,சுரங்க பாதைகளிலும் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.தலைநகர் கீவ் நகரை ரஷிய படைகள் கைப்பற்றும் நிலை உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனிடையே உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.இச்சூழலில் 100-க்கும் மேற்பட்ட தங்களின் ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.உக்ரைன் துறைமுகங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தொடர்ந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, தலைநகர் கீவுக்குள் ரஷ்ய படைகள் நூழைந்துவிட்டுதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு படைகளை அனுப்பும் எந்த திட்டமும் தற்போது வரை இல்லை என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.ஆனால் போரை கைவிட்டு உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் திரும்ப வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும் உக்ரைன் மீதான ரஷ்யா போர் நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.இதனிடையே அநியாய மற்றும் சட்டவிரோத போர்களை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு துருக்கி அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலையடுத்து அந்நாட்டின் தூதகர ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் தலைநகரம் கீவ் நகரில் அந்நாட்டின் ராணுவம் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 14 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டின் ராணுவ விமான நொறுங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.