கடந்த மே 30, 2024 நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் மேற்கொண்டிருந்த ஆய்வில், இதுவரை காணப்படாத அதிகளவிலான மஞ்சள் கந்தக படிகங்களை கண்டுபிடிதுத்ள்ளது.
நாசாவின், கியூரியாசிட்டி ரோவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக mount sharp (மவுண்ட் ஷார்ப்பை) ஆய்வு செய்து வருகிறது, செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர் வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலைகள் இருந்தாத்தா அல்லது இருக்கிறதா என பல கோணங்களில் அதன் அடுக்குகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் ஓட்டம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் மூலம் ஒரு சிக்கலான காரணங்கள் இருப்பதை அறியமுடிகிறது.
கடந்த ஜூன் 18 அன்று, கியூரியாசிட்டி ரோவர் தன் பாதையில் இருந்த பாறையில் அதன் 41வது துளையை இட்டது. அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தூள் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், செவ்வாய் கிரகத்தின் குழப்பமான புவியியல் கூறுகள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நிலவில் நூற்றுக்கணக்கான குகைகள் இருக்காம்! விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்ய லொகேஷன் ரெடி!
மேலும், கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் சல்பேட் நிறைந்த பகுதியை கடந்த அக்டோபர் 2023 முதல் ஆய்வு செய்து வருகிறது. சல்பேட்டு கனிமங்கள் முன்னர் கண்டறியப்பட்டிருந்தாலும், அவை எப்போதும் கந்தக அடிப்படையிலான கனிமங்களின் ஒரு பகுதியாகவே காணப்பட்டன. சமீபத்திய கண்டுபிடிப்பில் கிரகத்தில் முதல் முறையாக தூய்மையான கந்தக படிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முடக்கம்.. உலகம் முழுவதும் பாதிப்பு.. சரி செய்வது எப்படி? Microsoft விளக்கம்!
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்திலிருந்து கியூரியாசிட்டிரோவர்ரின் திட்ட விஞ்ஞானி அஷ்வின் வஸவடா, இந்த கண்டுபிடிப்பை உறுதிபடுத்தியுள்ளார். மவுண்ட் ஷார்ப் மீது சல்பர் படிகங்கள் காணப்பட்டன. இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தின் புவியியல் கூற்றை புரிந்துகொள்வதற்கும், உயிர்கள் வாழும் திறனை ஆதரிப்பதற்கான ஆற்றலுக்கும் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. கந்தகம் உயிர்வாழ முக்கிய நேரடி ஆதாரம் இல்லை என்றாலும், அதன் இருப்பு நுண்ணுயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருந்த கடந்த கால சுற்றுச்சூழல் நிலைமைகள் பற்றிய கூறுகள் பெற முடியும்.
ரூ.12 ஆயிரம் போன் இப்போ 7500 ரூபாய் தான்.. 50 MP கேமரா.. 6.74 இன்ச் HD+ டிஸ்பிளே.. இன்னும் பல வசதி இருக்கு!
க்யூரியாசிட்டி ரோவர், தனது ஆய்வை மேலும் தொடரும்போது, ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் சிவப்பு கிரகத்தின் மர்மங்கள் அழிக்கக்கூடும். செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்னர் எப்போதாவது உயிர்கள் இருந்ததா என்ற அடிப்படை கேள்விக்கு விரைவில் பதில் எதிர்பார்க்கலாம்.