Joe Biden: மனைவி என நினைத்து; வேறு ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கச் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!

By Raghupati R  |  First Published Jul 19, 2024, 10:15 AM IST

Joe Biden Viral Video: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியை நினைத்து மற்றொரு  பெண்ணுக்கு முத்தம் கொடுக்கச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.


டோம் லுக்ரே என்ற X பயனரால் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றொரு பெண்ணை தனது மனைவியாக நினைத்து முத்தமிடப் போகிறார். அதுவும் அவரது மனைவி ஜில் பைடன் வரும் வரை என்று கூறி பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோவிட்-19 தொற்று காரணமாக லேசான மேல் சுவாச அறிகுறிகளை அனுபவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பாக்ஸ்லோவிட் உடன் சிகிச்சை பெற்று வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

பைடனின் மருத்துவர் டாக்டர் கெவின் ஓ'கானர், அதிபருக்கு காய்ச்சல் இல்லை என்றும், அவரது முக்கிய அறிகுறிகள் இயல்பானவை என்றும் கூறினார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குறிப்பிட்ட அந்த பெண்ணை வெகு நேரம் பார்க்கிறார். தனது மனைவி ஜில் பைடன் என்று நினைத்து நெருங்கி செல்கிறார். பிறகு ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் வர பிரித்து வைக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் விவாதங்களை உண்டாக்கி உள்ளது.

🔥🚨DEVELOPING: Joe Biden was spotted about to kiss another woman he appeared to have thought was his wife until Jill Biden stopped him. pic.twitter.com/4SJXSpfIvc

— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre)

3 மணி நேரத்தில் முழு சார்ஜ்.. 85 கிமீ மைலேஜ்.. இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு?

click me!