செவ்வாய் கிரகத்துக்கு நாசாவால் அனுப்பி வைக்கப்பட்ட ரோவர்ஸ் நூடுல்ஸ் வடிவிலான பொருளை படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. இது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு நாசாவால் அனுப்பி வைக்கப்பட்ட ரோவர்ஸ் நூடுல்ஸ் வடிவிலான பொருளை படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. முன்பும் இதேபோன்ற படத்தை ரோவர் அனுப்பி இருந்தது, பின்னர் அது ரோவரில் இருந்து வெளியான குப்பை என்று தெரிய வந்தது. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, விஞ்ஞானிகளுக்கு மேலும் ஆராய்ச்சிக்கான உந்துதலை அளித்து இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்கல ஆராய்ச்சி நிறுவனம் ரோவர் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இதற்கு முன்பும் ரோவரை நாசா அனுப்பி இருந்தது. இந்த ரோவர் ஆச்சரியப்படுத்தும் வகையில் புகைப்படங்களை அனுப்பி இருந்தது. இந்த ரோவர் ஜெசரோ பள்ளம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அங்கு கிடைக்கப்பெற்ற படங்கள் வியப்பூட்டும் வகையில் இருந்தது.
undefined
இதற்கு முன்னதாக, செவ்வாய் கிரகத்தில் ஆறு சென்றதற்கான பதிவுகள் காணப்பட்டது. இந்த ஆறு 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அந்தப் பகுதியில் இருக்கும் களிமண் தாதுக்கள் தற்போதும் ஆற்றின் சுவற்றுப் பகுதிகளில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இந்தப் பகுதியில் நுண்ணுயிர்கள் கண்டிப்பாக வாழ்ந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த ஜெசரோ பள்ளம் (Jezero Crater) 28 மைல் தொலைவிற்கு (45 கி. மீட்டர்) அகலமானது. செவ்வாய் கிரகம் எப்போதும் விஞ்ஞானிகளுக்கு பல அரிய தகவல்களை அளித்து வருகிறது. மேலும், இந்த கிரகத்தில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுமே உருவாகிக் கொண்டு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது புதிய பொருள் ஒன்று கிடைத்து இருப்பது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது. இது என்ன பொருளாக இருக்கும் என்ற ஆய்வில் இறங்கியுள்ளனர். கடந்த முறை கிடைத்த பொருள் பளபளக்கும் வெள்ளி கம்பி போன்று இருந்துள்ளது. பின்னர் இது ரோவரில் இருந்து விழுந்த ஒரு பொருள் என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஓராண்டாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் ரோவர் இன்னும் பல அரிய தகவல்களை பகிரும் என்று நம்பப்படுகிறது.
இவற்றில் எல்லாமே சிறப்பு என்னவென்றால், செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பூமியில் இருந்து பார்க்கலாம்என்பதுதான். இந்த கிரகத்தின் மேற்பரப்பில் அதிகளவில் இரும்பு தாதுக்கள் காணப்படுவதால் இது சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. சூரியனில் இருந்து நான்காவது கிரகமாக செவ்வாய் உள்ளது. பூமிக்கு அருகில் இருப்பதால் செவ்வாய் கிரகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எளிதாக பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.