Sunita Williams : விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் மீட்க வெறும் 19 நாள்கள் தான் உள்ளது.
கடந்த ஜூன் 13ம் தேதி விண்வெளி ஆய்வுக்காக ISS எனப்படும் (International Space Station) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும், அடுத்த 19 நாள்களுக்குள் பூமிக்கு அழைத்துவரவேண்டும் என்ற கட்டாயத்தில் இப்பொது NASA உள்ளது.
சுனிதா மற்றும் புட்ச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இரு விண்வெளி வீரர்களும் கடந்த 50 நாள்களாக மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாமல் ISSலேயே சிக்கித் தவித்து வருகின்றனர். கடந்த ஜூன் 13, 2024 அன்று ISSல் நிலை நிறுத்தப்பட்ட அவர்களது ஸ்டார்லைனர், ஒரு வார கால பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
undefined
Mid East Crisis | இஸ்ரேல் செல்லும் விமானங்கள் ரத்து! - ஏர் இந்தியா அறிவிப்பு
சரி ஏன் இந்த 19 நாள் கேடு?
சுனிதா சென்ற விண்கலத்தின் த்ரஸ்டர்கள் மற்றும் ஹீலியம் அமைப்புகளில் உள்ள சிக்கல்கள் தான், அவர்களது விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி Crew 9 என்ற அமைப்பை விண்ணில் ஏவ அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில், சுனிதா மற்றும் புட்ச் ஆகிய இருவரது விண்கலத்தை அதற்கு முன்னதாக பூமிக்கு கொண்டுவந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது நாசா.
நாசா மற்றும் போயிங் பொறியாளர்கள் ஸ்டார்லைனரில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்ய அயராது உழைத்து வருகின்றனர். நாசாவின் வணிகக் குழு திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் பேசுகையில், வீரர்கள் இருவரும் திரும்புவதற்கான காலக்கெடு குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
பூமியின் வளிமண்டலத்தில் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக மீண்டும் நுழைவதற்கு, அந்த விண்கலத்தின் த்ரஸ்டர்கள் மற்றும் ஹீலியம் அமைப்புகள் முக்கியமானவை, ஆகவே அதில் சிக்கல் உள்ளதால், எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட முடியாது என்றும், அது வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் கூறப்படுகிறது. Crew 9 விண்வெளிக்கு செல்லும்போது, அங்கு அதை நிறுத்த, முதலில் சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் சென்ற விண்கலம் அங்கிருந்து புறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 19 நாள் கால கெடுவுக்குள் விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா மற்றும் புட்ச் ஆகிய இருவரையும் பத்திரமாக பூமிக்கு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும் நாசா தெரிவித்திருக்கிறது. கடந்த ஜூன் மாதம் அவர்கள் சென்ற நிலையில், கிட்டத்தட்ட 50 நாட்களாக அவர்கள் விண்வெளி மையத்தில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Crowdstrike-ல் சிக்கியவர்களா நீங்கள்? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்! - ஜாக்கிரதை!