அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் இராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் கடந்த மாதம் காசாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இன்று உறுதிப்படுத்தியது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்று கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில் "ஜூலை 13, 2024 அன்று, கான் யூனிஸ் பகுதியில் IDF போர் விமானங்கள் தாக்கப்பட்டது, மேலும் உளவுத்துறை மதிப்பீட்டைத் தொடர்ந்து, முகமது டெய்ஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறோம்” என்று இராணுவம் கூறியது.
undefined
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது இஸ்ரேலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இரண்டு உயர்மட்ட ஹமாஸ் தலைவர்களின் மரணம் ஈரானுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் குறிப்பாக ஹமாஸுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்.
Hamas leader killed: இஸ்ரேல் படை தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பலி! உறுதிபடுத்திய IRGC!
முகமது டெய்ஃபை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
ஹமாஸ் இராணுவத் தலைவர் முகமது டெய்ஃப்பை கொல்வதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் ஜூலை 13 (சனிக்கிழமை) அன்று வான்வழித் தாக்குதலை நடத்தியது, இதில் தெற்கு காஸாவில் 90 பேர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில், கான் யூனிஸ் அருகே உள்ள கட்டிடத்தில் டெய்ஃப் பதுங்கியிருப்பதாக வந்த தகவல்களுக்குப் பிறகு டெய்ஃப் கொல்லப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் 1,200 இறந்தனர். இதை தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதால் இஸ்ரேலில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. ஹமாஸ் தலைமையிலான அக்டோபர் 7 தாக்குதலின் பின்னணியில் முக்கிய மூளையாக டெய்ஃப் இருப்பதாக நம்பப்படுகிறது. பல ஆண்டுகளாக இஸ்ரேலின் மோஸ்ட் வாண்டட் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அவர், கடந்த காலங்களில் இஸ்ரேலின் பல படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக நம்பப்படுகிறது. இந்த சூழலில் முகமது டெயிஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
எனினும், ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் இஸ்ரேலின் இந்த தகவலை மறுத்துள்ளார். முகமது டெயிஃப் தற்போது சுரங்கப்பாதையில் மறைந்திருப்பதாக அவர் கூறினார். இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை "முட்டாள்தனம்" என்று கூறிய அவர், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார்.
யார் இந்த முகமது டெயிஃப் ?
ஹமாஸின் இராணுவப் பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப், அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலுக்கு எதிராக 'ஆபரேஷன் அல்-அக்ஸா புயல்' என்று அறிவித்தார். இதை தொடர்ந்து மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலையும் நடத்தினார். பாலஸ்தீனிய போராளியான டெய்ஃப், 2002 இல் ஹமாஸ் இராணுவப் பிரிவின் தலைவரானார்.
பாகிஸ்தானில் பயங்கர கலவரம்: நிலத் தகராறால் நடந்த சண்டையில் 36 பேர் பலி; 162 பேர் காயம்
முன்னதாக 1996 ஆம் ஆண்டில், டெய்ஃப் மற்றும் அய்யாஷ் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்து குண்டுவெடிப்புகளில் சுமார் 50 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டு 2001 இல் விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்ட பிறகு, டெய்ஃப் தொடர்ச்சியான கொடிய குண்டுவெடிப்புத் தாக்குதல்களை ஏற்பாடு செய்தார். இதில் பல இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்..
முகமது டெயிஃபின் ஹமாஸ் அமைப்பின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக மாறியதால், இஸ்ரேள் ராணுவம் மற்றும் உளவுத்துறை நிறுவனமான மொசாட் அவரைப் பலமுறை படுகொலை செய்ய முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தத. இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் 2021 ஆம் ஆண்டுக்கு முன் குறைந்தது ஐந்து முறை அவரைக் கொல்ல முயன்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் போது, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) மீண்டும் இரண்டு முறை அவரைக் கொல்ல முயன்றது. முதல் படுகொலை முயற்சி 2001 நடந்தது. பின்னர் 2002-ம் ஆண்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் முகமது டெய்ஃப் ஒரு கண்ணை இழந்தார். 2006 ஆம் ஆண்டில், இஸ்ரேல் மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தியது, அதில் முகமது டெய்ஃப் தனது இரண்டு கால்களையும் ஒரு கையையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.