Hamas leader killed: இஸ்ரேல் படை தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பலி! உறுதிபடுத்திய IRGC!

By Dinesh TGFirst Published Jul 31, 2024, 9:25 AM IST
Highlights

தெஹ்ரானில் உள்ள ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இதனை, IRGC உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுளான இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் இதுவரையிலும் சுமார் 39 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1,200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரான் நாட்டு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் ஹனியே வந்தபோது, தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல் நடத்தியது. இதில் அவர் கொல்லப்பட்டார்.

Latest Videos

Paris Olympic 2024 |பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா ஒரு 'அவமானம்'! - டொனால்ட் டிரம்ப் விளாசல்!

இத்தாக்குதல் தொடர்பாக ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சகோதரரும், தலைவரும், போராளியுமான இஸ்மாயில் ஹனியே ஈரான் நாட்டு தலைநகர் தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர படைகளும் இந்த தகவலை உறுதி படுத்தியுள்ளது. இதனால், பெரும் பதற்றம் நிலவிவருகிறது.

இஸ்மாயில் ஹனியே கடந்த 1987-ம் ஆண்டு ஹமாஸ் படையில் இணைந்தார். இஸ்ரேலுக்கு எதிரான முதல் புரட்சியில் அவர் பங்கேற்றார். 1993ம் ஆண்டு வரை நடந்த மோதலில் இஸ்மாயில் ஹனியோ முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது 3-வது பதவிக்காலத்தில், இந்தியா 3-வது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் : பிரதமர் மோடி நம்பிக்கை
 

click me!