இந்தியாவிலிருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்கும் செல்லும் அனைத்து விமானங்களும் வரும் 8ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் பதற்றம் காரணமாக, இஸ்ரேலின் மிக முக்கியமான நகரமான டெல் அவிவ் நகருக்கு செல்லும் அனைத்து வகை விமானங்களும் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக ஈரான் நாட்டு ராணுவப்படையினர் மற்றும் இஸ்ரேல் நாட்டு ராணுவப்படையினர் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் கொலை
ஈரான் நாட்டு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தங்கியிருந்தார். அந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவ் படை நடத்திய தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதனை,IRGC-யும் உறுதிப்படுத்தியது.
undefined
Hamas leader killed: இஸ்ரேல் படை தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பலி! உறுதிபடுத்திய IRGC!
அதனைத் தொடர்ந்து, மேலும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ தளபதி இருந்த முகமது டெயிப்-ம் படுகொலை செய்யப்பட்டார். எந்நேரமும் ஈரான் ராணுவம் நேரடி தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தால், மத்தியக் கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
விமானங்கள் ரத்து
இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் நகருக்கு செல்லும் அனைத்து வகை விமானங்களும் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விமான ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது
எனது 3-வது பதவிக்காலத்தில், இந்தியா 3-வது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் : பிரதமர் மோடி நம்பிக்கை