ஓய்வுபெற்ற அமெரிக்க விமானப்படை கேப்டன் ஒருவர் அணுசக்தி ஏவுகணை தளம் "யுஎஃப்ஒவின் தாக்குதலுக்கு உள்ளான திகிலூட்டும் தருணத்தை நினைவு கூர்ந்தார்.
பூமியில் எப்படி மனிதர்கள் வாழ்கிறார்களோ, அதே போல வேற்று கிரகங்களில் வசிப்பவர்கள் வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று தொடர்ந்து ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். குறிப்பாக பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஏலியன்களின் யு.எஃப்.ஓ.க்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஏலியன் மற்றும் யு.எப்.ஓக்கள் தொடர்பான மர்மங்களும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற அமெரிக்க விமானப்படை கேப்டன் ஒருவர் தனது அணுசக்தி ஏவுகணை தளம் "யுஎஃப்ஒவின் தாக்குதலுக்கு உள்ளான" திகிலூட்டும் தருணத்தை நினைவு கூர்ந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி மறைக்கப்பட்ட இந்த சம்பத்தால் காவலர்கள் பயந்து", "கத்தி" மற்றும் பதட்டமடைந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தனது வளர்ப்பு பாம்பை ஆயுதமாக பயன்படுத்திய நபர்.. வினோத தெருச் சண்டை.. வைரல் வீடியோ
ராபர்ட் சலாஸ் என்ற, ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை கேப்டன், 1967 இல் மொன்டானாவில் உள்ள மால்ஸ்ட்ரோம் தளத்தின் பொறுப்பாளராக இருந்தார். மார்ச் 24, 1967 அன்று, ராபர்ட்டும் அவரது சகாக்களும் 10 அணு ஏவுகணைகளை வைத்திருந்த தளத்தின் மீது எட்டு ஆரஞ்சு நிற விளக்குகளைக் கண்டனர்.
நேஷனல் ஜியோகிராஃபி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் UFOs: Investigating The Unknown என்ற புதிய தொடரில் இதுகுறித்து பேசிய, ஓய்வுபெற்ற கேப்டன், "நான் அதை நிராகரித்தேன். 'நீங்கள் யுஎஃப்ஒக்களை சொல்கிறீர்களா என்று கேட்டேன். சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நானும் கத்த ஆரம்பித்தேன். நான் தொலைபேசியைத் துண்டித்தபோது, நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டோம் என்று நினைத்தேன். பலகை முழுவதும் பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்தில் விளக்குகள் செல்வதைக் காண முடிந்தது.
அதாவது ஏவுகணைகள் செயலிழந்தன. இந்த சம்பவத்தின் போது, அமெரிக்காவின் அணுசக்தித் திறனில் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, இருப்பினும், அது விசாரிக்கப்படவில்லை. ஊழியர்கள் ரகசியம் காக்கும் ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க விமானப்படை தனது UFO விசாரணையை நிறுத்தியது, எந்த புகாரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று கூறியது. அது நிச்சயமாக ஒரு பொய்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகிறாரா? தீயாக பரவும் தகவல்.. இலங்கையில் என்ன நடக்கிறது?