தெரு சண்டையின் போது ஒரு நபர் மற்றொரு நபரை தாக்க, தனது மலைப்பாம்பை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக தெருவில் நடக்கும் சண்டைகளில் குச்சிகள், செங்கற்கள் போன்றவை ஆயுதங்களாக பயன்படுத்தப்படும்., ஆனால் யாராவது பாம்பை ஆயுதமாக பயன்படுத்துவதை நீங்கள் பார்த்தீர்களா? ஒரு நபர் மலைப்பாம்பை வைத்து சண்டையிடுகிறார். ஆம்.. கனடாவின் டொராண்டோவில் நடந்த சண்டையின் போது ஒரு நபர் மற்றொரு நபரை மலைப்பாம்பு மூலம் தாக்குகிறார். இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : இதுதான் உண்மையான 007! ஸ்வீடனில் கில்லர் லுக்கில் அமைச்சர் ஜெய்சங்கர்!
இந்த வினோதமான சம்பவம் கனடாவின் Dundas Street West- Manning Avenue பகுதியில் நடந்துள்ளது. ஒரு நபர் தனது செல்லப் பாம்பை பயன்படுத்தி சாலையின் நடுவில் ஒருவரை அடிப்பதைக் காண முடிகிறது. பின்னர் காவல்துறையினர் அங்கு வந்தவுடன் பாம்பால் தாக்கிய நபர் கீழே படுத்துக்கொள்கிறார். பாம்பு விலகி செல்கிறது. Crazy clips என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. "டொரண்டோவில் ஒரு தெரு சண்டையின் போது ஒரு நபர் தனது வளர்ப்பு பாம்பை ஆயுதமாக பயன்படுத்துகிறார்" என தலைப்பிட்டுள்ளது.
Dude uses his pet snake as a weapon during street fight in Toronto 😳 pic.twitter.com/T2lLKaLe4E
— Crazy Clips (@crazyclipsonly)
ஒரு நபர் மலைப்பாம்பு பாம்பைக் கொண்டு மக்களை அச்சுறுத்துவது குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரை தாக்க அந்த நபர் மலைப்பாம்பைப் பயன்படுத்தினார்" என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 45 வயதான லோரேனியோ அவிலா என அடையாளம் காணப்பட்ட டொராண்டோ குடியிருப்பாளர் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் பாம்பை கொண்டு தாக்கியதாகவும் விலங்குக்கு தேவையற்ற வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பின்னர் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : 15 ஆண்டுகளாக மருத்துவ விடுப்பில் உள்ள ஐபிஎம் ஊழியர்.. தனது நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்?