தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, ஊழல் வழக்கு தொடர்பாக லாகூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான்கானை, அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: இதுதான் உண்மையான 007! ஸ்வீடனில் கில்லர் லுக்கில் அமைச்சர் ஜெய்சங்கர்!
undefined
ஆனால், உச்சநீதிமன்றம் தலையிட்டதையடுத்து இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டார். இருந்த போதிலும் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை அடுத்து இம்ரான்கான் தொடர்ந்து விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில், தேசதுரோக வழக்கில் தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 15 ஆண்டுகளாக மருத்துவ விடுப்பில் உள்ள ஐபிஎம் ஊழியர்.. தனது நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்?
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை போராடுவேன். தேசதுரோக வழக்கில் தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது என்றார். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாகிஸ்தானில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.