கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவ விடுப்பில் உள்ள ஐபிஎம் ஊழியர் ஒருவர், சம்பள உயர்வு இல்லை என்று நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.
2008 ஆம் ஆண்டு முதல் மருத்துவ விடுப்பில் இருக்கும் ஒரு மூத்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர், ஊதிய உயர்வு பெறாததால் தனது நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார். ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் இயன் கிளிஃபோர்ட் கடந்த 15 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் 2013 முதல் 'மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்றவர்' என்று அவரது LinkedIn சுயவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தான் வேலை செய்ய முடியாமல் போன 15 ஆண்டுகளில் தனது வருமானம் மேம்படாததால், தான் "இயலாமை பாகுபாட்டிற்கு" பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். ஐபிஎம் நிறுவனத்தின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஐடி நிபுணர் ஆண்டுக்கு 54,000 பவுண்டுகள் ($67,300 அமெரிக்க டாலர் ) அதிகமாகச் சம்பாதிப்பார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் 65 வயது வரை அவருக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் பணவீக்கம் காரணமாக தனது வருமானம் இறுதியில் குறையும் என்பதால், சுகாதாரத் திட்டம் போதுமானதாக இல்லை என்று அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
undefined
இதையும் படிங்க : மகனின் உடலை 200 கி.மீ பையில் வைத்து எடுத்து சென்ற நபர்.. ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால் நடந்த அவலம்
இதனிடையே, IBM நிறுவனம் இயன் கிளிப்போர்டுக்கு ஒரு சமரச ஒப்பந்தத்தை வழங்கியது. அதன்படி அவரை பணிநீக்கம் செய்வதற்கு பதில், நிறுவனத்தின் ஊனமுற்ற திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்ய முடியாத ஒரு தொழிலாளி பணிநீக்கம் செய்யப்படுவதில்லை; அதற்கு பதிலாக, அவர்கள் இன்னும் பணியாளர்களாகக் கருதப்படுகிறார்கள் என்றும் அவர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம்” இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட எவரும், குணமடைதல், ஓய்வுபெறுதல் அல்லது இறப்பு வரை, ஒப்புக்கொள்ளப்பட்ட ஊதியத்தில் 75% பெறுவதற்கு உரிமையுண்டு. அதன்படி, இயன் கிளிப்போர்டுக்கு, ஒப்புக்கொள்ளப்பட்ட இழப்பீடு 72,037 பவுண்டுகள் ஆகும், அதாவது 2013 இல் தொடங்கி, 25% விலக்குக்குப் பிறகு அவர் 54,028 பவுண்டுகளைப் பெறுவார். அவர் 65 வயதை அடைந்து ஓய்வு பெறும் வரை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திட்டம் அமைக்கப்பட்டது.
ஆனால் இயன் கிளிப்போர்டு பிப்ரவரி 2022 இல் IBM-க்கு எதிராக வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், தனது நிறுவனம் தனக்கு பாகுபாடு காட்டியதாக குற்றம் சாட்டினார். ஆனால் எதிர்பாராதவிதமாக, அவரது கூற்றுகள் ஒரு வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டது.
ஊனமுற்றோர் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும் என்பதால் சம்பள உயர்வு இல்லாதது பாரபட்சம் அல்ல என்று நீதிபதி விளக்கமளித்தார். சுறுசுறுப்பான ஊழியர்கள் ஊதிய உயர்வைப் பெறலாம், ஆனால் தன்னை போன்ற செயலற்ற ஊழியர்கள் சம்பள உயர்வை பெறுவதில்லை என்று இயன் கிளிப்போர்டு வாதிட்டார். இருப்பினும், இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, இது பாரபட்சமான வழக்கு அல்ல என்று கூறினார்.
இதையும் படிங்க : மோடி அரசு அனைத்து மக்களுக்கும் ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறதா? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன?