முஷாரப் பிணம் 3 நாள் தூக்கில் தொங்கவிடப் பட வேண்டும்.... பாகிஸ்தான் நீதிமன்றத்தின் கொடூர தீர்ப்பு !!

By Selvanayagam P  |  First Published Dec 19, 2019, 10:52 PM IST

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில்  தண்டனை நிறைவேற்றுதவதற்கு முன்பு அவர் இறந்துவிட்டால்  அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் கொடூர தீர்ப்பு வழங்கியுள்ளது.


பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு, தேச துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து, பாகிஸ்தான்  சிறப்பு நீதிமன்றம் கடந்த .17-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வாக்கர் அகமது சேத், நீதிபதிகள் நாசர் அக்பர், ஷாகித் கரீம் ஆகியோர் அடங்கிய சிறப்பு நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் வழங்கியுள்ள 167 பக்க தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Latest Videos

அரசியல் சட்டத்தை முடக்கி வைத்து, நெருக்கடி நிலையை அமல்படுத்தியதாக, முஷாரபுக்கு எதிராக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில், அவர் குற்றம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக முஷாரப் ஏதேனும் ஒரு சில காரணங்களால் இறக்க நேரிட்டால், அமலாக்கத்துறை ஏஜென்சியினர், முஷாரப் சடலத்தை எடுத்து வந்து இஸ்லாமாபாத்தில் டி. செளவுக் என்ற இடத்தில் வைத்து மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என கொடூரமான முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

click me!