பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி..?? உச்ச கட்ட பதற்றத்தில் இம்ரான்கான்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 19, 2019, 4:24 PM IST
Highlights

 முஷரப்பின் பழைய உரைகளை தேர்தெடுத்து ஒளிபரப்பி வருகின்றன.  இது பாகிஸ்தான் மக்களின் உணர்வு பூர்வமான விவகாரமாக மாறியுள்ளது எனவே அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் ஏறபட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது அந்நாட்டின் ராணுவ முதல் உள்ளூர் தொலைக்காட்சிகள் வரை முஷரப்புக்கு ஆதரவாக குரலெழுப்பி வருவதால் பாகிஸ்தானில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது அவர்களின் கோபம் பாகிஸ்தான் அரசின் மீதும் இம்ரான் கானின் மீதும் திரும்பியிருக்கிறது .  உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் , இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதித்திருக்கிறது பெஷாவர் நீதிமன்றம்  குறிப்பாக இது பாகிஸ்தான் இராணுவத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. 

நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆஷிக் கபூர் , முன்னாள் ராணுவத் தலைவர் ,  முப்படைத் தளபதி ,  நாட்டின் அதிபர் என  40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காகவே சேவை செய்தவரா தேசத் துரோகியாக இருக்கமுடியும்.?  இந்த தீர்ப்பு சட்டப்படி கொடுக்கப்பட்ட  தீர்ப்பா.? அல்லது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவா.? தீர்ப்பு பாகிஸ்தானின் அரசியல் சாசன சட்டப்படி இருக்க வேண்டும் என்று ராணுவம் விரும்புகிறது அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது ஆட்சியாளர்களுக்கும் நீதித்துறைக்கும் ராணுவம் விடுத்திருக்கும் எச்சரிக்கையாகவே இது பாகிஸ்தானில் பார்க்கப்படுகிறது இந்நிலையில் முஷரப்புக்கு  எதிராக தீர்ப்பு வந்தபோது நாட்டின் பிரதமர் இம்ரான்கான் ஜெனிவாவில் இருந்தார் .  இந்நிலையில் இம்ரான்கான்  சார்பாக அவரின் உதவியாளர் பிரதோஷ் ஆஷிக் ஆவான்,  ராணுவத்தின் கருத்தைக் கேட்டு இது குறித்து விரிவான அறிக்கையை அரசு அளிக்கும் என்று  கூறியிருந்தார். 

இந்நிலையில் பாகிஸ்தான்  அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர்,  இந்தத் தீர்ப்பு நியாயமற்றது நாங்கள் மேல் முறையீடு செய்யப் போகிறோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார் . இந்நிலையில்  நாடு திரும்பியுள்ள பிரதமர் இம்ரான்கான் தனது கட்சியான தெரிக்- இன்-ஷாப் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்து வருகிறார் இந்நிலையில் உள்ளூர் தொலைக்காட்சிகள்  முஷரப்பின் பழைய உரைகளை தேர்தெடுத்து ஒளிபரப்பி வருகின்றன.  இது பாகிஸ்தான் மக்களின் உணர்வு பூர்வமான விவகாரமாக மாறியுள்ளது எனவே அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் ஏறபட்டுள்ளது. மீண்டும் ராணுவ ஆட்சி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இம்ரான் மற்றும் அவரது கட்சியினர் இருப்பதாக சொல்லப்படுகிறது . 

click me!