இதை கவனித்த சிறுவனின் தாய் கன நேரத்தில் மிக சாதூர்யமாக செயல்பட்டு, ஒற்றை கையில் மகனை கேட்ச் பிடித்து காப்பாற்றும் பரபர காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நீச்சல் குளம் ஒன்றில் மகன் குதிப்பதை கன நேரத்தில் தடுத்து நிறுத்தி. காப்பாற்றிய தாய் இணையத்தில் பாராட்டுக்களை வாரி குவித்து வருகிறார். டுவிட்டர் தளத்தில் பகிரப்பட்டு இருக்கும் வீடியோ ஒன்றில், சிறுவன் ஒருவன் நீச்சல் குளத்திற்குள் தாவி குதிக்க முற்படுகிறான். இதை கவனித்த சிறுவனின் தாய் கன நேரத்தில் மிக சாதூர்யமாக செயல்பட்டு, ஒற்றை கையில் மகனை கேட்ச் பிடித்து காப்பாற்றும் பரபர காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ Mother Of The Year எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோவை சுமார் 4 லட்சத்து 77ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ பல்லாயிரம் லைக்குகளையும் பெற்று இருக்கிறது. சிலர் வீடியோவில் இருவப்பவர் " Super Mom" என குறிப்பிட்டுள்ளனர்.
சூப்பர் ஹியுமன்:
மேலும் சிலர் இதே போன்று குழந்தைகளை தாய்மார்கள் எப்படி எல்லாம் காப்பாற்றி இருக்கிறார்கள் என்பதை கூறும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். "இதனை நம்ப முடியவில்லை. எனக்கு மூட நம்பிக்கை இல்லை. ஆனால் அனைத்து தாய்மார்களுக்குள் சூப்பர் ஹியுமன் செயல்திறன் நிச்சயம் உள்ளது. அதுவும் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களால் அமைதி காக்க முடியாது." என இந்த வீடியோவை பகிர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Mother of the year!👏 pic.twitter.com/TIXn8P85gx
— Figen (@TheFigen)மற்றொரு நபர், "உண்மையில் ஸ்பைடர்மேன் இருந்து இருந்தாலும், இந்த குழந்தையை இவ்வளவு சாதூர்யமாக காப்பாற்றி இருக்க முடியாது," என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இதே போன்ற சூழலில், தாய் ஒருத்தர் தனது மகனை டிரக் மோதுவதில் இருந்து காப்பாற்றிய சம்பவம் அடங்கிய வீடியோ வைரல் ஆனது. இந்த வீடியோ சமீபத்தில் மீண்டும் ஒரு முறை வைரல் ஆனது. இந்த வீடியோவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பதில் அளித்து இருந்தார்.
மற்றொரு வீடியோ:
இந்த வீடியோவை காரில் சென்ற யாரோ பதிவு செய்து இருந்தனர். அதன்படி மூன்று பேர் மோட்டார்சைக்கிள் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். திடீரென நிலை தடுமாறியதை அடுத்து குழந்தை மற்றும் தாய் மோட்டார்சைக்கிளில் இருந்து டிரக் வரும் வழியில் கீழே விழுந்து விட்டனர். அப்போது குழந்தையை டிரக் மோத வருகிறது. திடீரென சுதாரித்துக் கொண்ட தாய், குழந்தையை மிக வேகமாக தன்பக்கமாக இழுத்துக் கொண்டார்.
தாய் சாதூர்யமாக செயல்பட்டதை அடுத்து டிரக் ஏறி சாக இருந்த குழந்தை உயிர் பிழைத்துக் கொண்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதோடு, பலர் இதனை லைக் செய்து இருந்தனர்.