நடுவானில் விசித்திரம்.... விமானத்தில் நடைபெற்ற திருமணம்... வைரல் ஆகும் புகைப்படங்கள்..

By Kevin Kaarki  |  First Published May 3, 2022, 3:30 PM IST

லாஸ் வேகருக்கான இணைப்பு விமானத்தில் ஏற ஆயத்தமாகினர். அப்போது தான் அவர்களுக்கான அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது. 


ஒக்லஹோமா நகரை சேர்ந்த பேம் மற்றும் பேட்டர்சன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவருக்கும் லாஸ் வேகாஸ் தேவாலயம் ஒன்றில் திருணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்த தம்பதிக்கு நடுவானில் திருமணம்  நடைபெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதன்படி பேம் மற்றும் பேட்டர்சன் தம்பதி லாஸ் வேகாஸ் நகருக்கு திருமணம் செய்து விமானத்தில் செல்ல திட்டமிட்டு, முன்கூட்டியே விமான பயணச் சீட்டுக்களை எடுத்துக் கொண்டனர். திட்டப்படி விமான நிலையம் வந்த ஜோடி அங்கிருந்து டல்லாஸ் போர்ட் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். இங்கு இருந்து லாஸ் வேகருக்கான இணைப்பு விமானத்தில் ஏற ஆயத்தமாகினர். அப்போது தான் அவர்களுக்கான அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது. 

Tap to resize

Latest Videos

விமானம் ரத்து:

டல்லாஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாஸ் வேகாஸ் புறப்பட வேண்டிய விமானம் பலமுறை தாமதமாகி, இறுதியில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்டதும், திருமணத்திற்கு சிராயன நேரத்திற்கு போக முடியாது என்பதை அறிந்து கொண்டு அதிர்ந்து போயினர். முன்னதாக ஒக்லஹோமா நகரில் இருந்து டல்லாஸ் வந்த விமானத்தில் இவர்களுடன் பயணம் செய்த க்ரிஸ் என்ற நபர், இந்த ஜோடிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து கொண்டார்.

திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஜோடி அதிர்ச்சியடைந்ததை பார்த்த க்ரிஸ், அவர்களை சரியான நேரத்திற்கு அழைத்துச் செல்வதாக அவர்களிடம் உறுதி அளித்தார். அதன்படி மூவரும் அங்கிருந்து லாஸ் வேகாஸ் புறப்பட சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டனர். 

திருமண ஏற்பாடு:

திருமண உடை அணிந்த படி விமானத்தில் ஏறிய பேம்-ஐ பார்த்து விமானி விசாரித்துள்ளார். அப்போது விமானத்திலேயே திருமணம் செய்து கொள்ளப் போதவாக பேம் விமானியிடம் தெரிவித்தார். உடனே விமானியும், சரி செய்து விடலாம் என பதில் அளித்து இருக்கிறார். 

இதை அடுத்து உடனடியாக விமான ஊழியர்கள், அதில் பயணம் செய்த புகைப்பட கலைஞர் என விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, நடுவானில் இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. நடுவானில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

click me!