முன்னாள் மனைவியுடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். பவுண்டேஷனில் ஊழியர்களுடன் வருடாந்திர சந்திப்பை இருவரும் சேர்ந்தே நடத்துகிறோம்.
முன்னாள் மனைவி மெலிண்டா பிரென்ச் கேட்ஸ் உடனான திருமணம் சிறப்பான ஒன்றாக இருந்தது, மீண்டும் அவரை திருமணம் செய்ய விரும்புவதாக பில் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதி கடந்த ஆண்டு மே மாத வாக்கில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். திருமணம் ஆகி 30 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், இந்த தம்பதியின் விவகாரத்து செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விவகாரத்து பெற்றுக் கொண்ட போதிலும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனை இணைந்து நடத்துவதாக அறிவித்தனர். இவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போபி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு மே 1 ஆம் தேதி அளித்த பேட்டியில், பில் கேட்ஸ் கடந்த இரு ஆண்டுகள் பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டம், விவாகரத்தை விட தனது பிள்ளைகள் பிரிந்து சென்றது துயரமாக இருந்தது என தெரிவித்தார். முன்னாள் மனைவியுடன் பணியாற்றும் அனுபவம், திருமண உறவு முறிந்த பின் ஏற்பட்ட துயரம் பற்றியும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
"ஒவ்வொரு திருமண வாழ்க்கையிலும் குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி வீட்டை விட்டை வெளியேறும் போது மாற்றங்கள் நிச்சயம் நடக்கும். எனக்கு இந்த மாற்றம் விவாகரத்தாகி விட்டது. திருமண வாழ்க்கை நிறைவுற்று விட்டாலும், அது சிறப்பான திருமணமாகவே இருந்தது. நான் அதை மாற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் நான் வேறு யாரையும் திருமணம் செய்ய விரும்பவில்லை என உங்களுக்கு தெரியும்," என பில் கேட்ஸ் தெரிவித்து உள்ளார்.
மெலிண்டா பிரென்ச் கேட்ஸ்-ஐ மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த பில் கேட்ஸ், "மெலிண்டா கேட்ஸ்-ஐ மீண்டும் திருமணம் செய்ய விரும்புகிறேன். எனது எதிர்காலம் பற்றி இதுவரை எந்த திட்டமும் என்னிடம் இல்லை. ஆனால் திருமணத்தை நான் பெரிதும் பரிந்துரைக்கிறேன்," என குறிப்பிட்டார்.
"விவகாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளேனா என்பது பற்றி எனக்கு இதுவரை எதுவும் தெரியவில்லை. எனினும், முன்னாள் மனைவியுடன் பணியாற்றுவதை தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். பவுண்டேஷனில் ஊழியர்களுடன் வருடாந்திர சந்திப்பை இருவரும் சேர்ந்தே நடத்துகிறோம். இந்த சந்திப்பு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது," என பில் கேட்ஸ் தெரிவித்தார்.
"நான் இன்னமும் மெலிண்டாவின் தோழனாக இருக்கிறேன். மெலிண்டாவுடன் மிக முக்கிய, நெருக்கமான உறவு தொடர்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பவுண்டேஷனை இருவரும் இணைந்தே உருவாக்கினோம்," என்றும் பில் கேட்ஸ் தெரிவித்தார்.