உலகின் பெரிய விஸ்கி பாட்டிலில் 444 வழக்கமான விஸ்கி பாட்டில்களுக்கு இணையான விஸ்கி உள்ளது. இதற்கான ஏலம் மே 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
பிரிட்டனில் 32 ஆண்டுகள் பழைய மெக்கல்லன் 311 லிட்டர் கொண்ட உலகின் மிகப் பெரிய பாட்டில் ஸ்காட்ச் விஸ்கி இந்த மாதம் ஏலத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. The Intrepid என அழைக்கப்படும் இந்த பாட்டில் 5 அடி 11 அங்குலம் உயரம் கொண்டிருக்கிறது.
இந்த விஸ்கி பாட்டிலை எடின்பர்க்-ஐ சேர்ந்த ஏல நிறுவனமான லியான் அண்ட் டர்ன்புல் ஏலத்தில் விற்பனை செய்ய இருக்கிறது. உலகின் பெரிய விஸ்கி பாட்டிலில் 444 வழக்கமான விஸ்கி பாட்டில்களுக்கு இணையான விஸ்கி உள்ளது. இதற்கான ஏலம் மே 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
உலக சாதனை:
உலகின் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விஸ்கி பாட்டில் என்ற பெருமையை இந்த பாட்டில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 1.9 மில்லியன் டாலர்கள் விலைக்கு விஸ்கி பாட்டில் விற்பனை செய்யப்பட்டு இருந்ததே உலக சாதனையாக இருந்து வருகிறது. கடந்த வருடம் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இந்த பாட்டில் இடம் பிடித்து இருந்தது.
தற்போது உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் ஏலம் நிறைவு பெறும் போது, உலகின் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விஸ்கி பாட்டில் என்ற பெருமையை இது பெறும் என தெரிகிறது. மேலும் இந்த விஸ்கி பாட்டில் 1.3 மில்லியன் யூரோக்கள் மற்றும் அதை கடந்து எவ்வளவு தொகைக்கு விற்பனையானாலும், அதில் இருந்து 25 சதவீத தொகை மேரி கியூரி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கிறது.
பெருமை:
"The Intrepid வாங்க உலகளவில் பலர் விரும்புவர் என நிச்சயம் நம்புகிறேன். இது பிரத்யேக கலெக்ஷனாக நிச்சயம் இருக்கும். 5 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட இந்த பாட்டில் ஏலத்தில் புது சாதனை படைக்கும். ஏலத்தில் கலந்து கொள்வோர் ஸ்காட்ச் விஸ்கி வரலாற்றில் ஒரு பகுதியை வாங்கும் வாய்ப்பை பெறுவர். அவர்கள் உலகின் சிறந்த மதுபான உற்பத்தியாளரான தி மக்கல்லென் உருவாக்கிய பிரத்யேக 32 ஆண்டுகள் பழைய சிங்கில்-மால்ட் ஸ்காட்ச்-ஐ வாங்க முடியும்," என லியோன் அண்ட் டர்ன்புல்-ஐ சேர்ந்த காலின் ஃபிரேசர் தெரிவித்து இருக்கிறார்.