தாயே குழந்தைகள் மீது வெந்நீரைக் கொட்டிய கொடுமை! சிங்கப்பூர் பெண்ணின் கொடூரச் செயல்!

By SG Balan  |  First Published Aug 2, 2023, 12:37 PM IST

குழந்தைகள் மீது வெந்நீரைக் கொட்டிய பெண்ணுக்கு 15,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதித்து ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.


சிங்கப்பூரில் 8 முதல் 11 வயதே ஆன தனது நான்கு குழந்தைகள் மீது வெந்நீரை ஊற்றியதாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை 33 வயதான அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் டாம்பைன்ஸில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கிறார். இவர் சென்ற 2022ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி அவர் தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் மீது வெந்நீரை தெளித்ததாக கூறப்படுகிறது. மகள்கள் மூவரும் 8, 10, 11 வயதானவர்கள். ஒரே மகனுக்கு வயது 9.

Tap to resize

Latest Videos

இதனால், குழந்தைகள் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, குழந்தைகளின் உடலில் 1 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. 10 வயது சிறுமியின் இடது கை, வயிறு மற்றும் இரு தொடைகளிலும் மிகக் கடுமையான காயங்கள் உள்ளதாகவும் சொல்லபடுகிறது.

வேலை தேடிச் ஈராக் சென்ற தமிழருக்கு டார்ச்சர்... மனைவிக்கு வீடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை

குழந்தைகள் இப்போது ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளின் தாய் அவர்களை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பெண் திருமணமாகி விவாகரத்து பெற்ற அவர் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணைக்குப் பின் அந்தப் பெண்ணுக்கு 15,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதித்து ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தன் பராமரிப்பில் உள்ள குழந்தையை மோசமாக நடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூர் சட்டப்படி, எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 8,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படலும். அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் கடன் 155.6 லட்சம் கோடி... ஜிடிபியில் 57.1 சதவீதம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தகவல்

click me!