சிங்கப்பூரில் செவிலியர் பற்றாக்குறை.. கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு - ஆவலோடு காத்திருக்கும் இந்திய செவிலியர்கள்!

By Ansgar R  |  First Published Aug 1, 2023, 8:54 PM IST

சிங்கப்பூர் தற்போது செவிலியர் துறையில் மனிதவளப் பிரச்சினைகளை எதிரிகொண்டு வரும் அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள செவிலியர்கள் அங்கு வேலை செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.


சில நம்பகமான ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் அளித்துள்ள தகவலின்படி, ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வமுள்ள செவிலியர்கள் நான்கு மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கின்றனர் என்று கூறியுள்ளது. சிங்கப்பூர் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 4,000 புதிய செவிலியர்களை பணிக்கு சேர்க்க உள்ளது, அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியை சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட செவிலியர் சனா ஷாஹித் பேசுகையில், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு போன்ற துறைகளில் சுமார் ஏழு வருட அனுபவம் பெற்ற அவர், ஊதியம் மற்றும் நல்ல சுகாதார அமைப்பு ஆகியவை தான் தன்னை சிங்கப்பூரைத் தேர்தெடுக்கவைத்தது என்று கூறியுள்ளார். 

Latest Videos

undefined

Foxconn : தமிழகத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் வருமா? வராதா? கிளம்பிய சர்ச்சை - தமிழக அரசு என்ன சொல்கிறது?

டைனமிக் ஹெல்த் ஸ்டாஃப் டைரக்டர் அருண் குமார் ஓஜா கூறுகையில், சிங்கப்பூருக்கு இடம்பெயர முடிவெடுக்கும் செவிலியர்களுக்கு மாதத்திற்கு 500 சிங்கப்பூ டாலர் (US$375) வரை வீட்டுக் கொடுப்பனவு, பணிக்கொடை மற்றும் அவர்கள் சேரும் நிறுவனங்களில் இருந்து போனஸ் உள்ளிட்டவை வழங்கப்டும் என்றார்.  சமீபகாலமாக சிங்கப்பூருக்குச் செல்ல அதிக இந்திய செவிலியர்கள் ஆர்வம் காட்டுவதற்கு இந்தச் சலுகைகளும் ஒரு காரணம் என்றார் அவர். 

வெளிநாட்டு செவிலியர்கள், சிங்கப்பூர் செவிலியர் வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை கடைபிடிக்க வேண்டும் மற்றும் சிங்கப்பூரில் மேற்பார்வையிடப்பட்ட பணிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

மேலும் உள்ளுறை பொறுத்தவரை "சுகாதாரப் பணியாளர்களாகப் பட்டம் பெறும் மாணவர்களுக்கு, வெளிநாட்டு முதலாளிகள் விரும்பும் தேவைகள் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், பாடத்திட்டத்தில் திருத்தம் மற்றும் மாற்றங்களைச் செய்ய நிறைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்" என்று வேலைவாய்ப்பு முகமையின் தலைவர் திரு. வருண் கோஸ்லா கூறினார்.

Gas Price : அதிரடியாக குறைந்த எல்பிஜி சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ !!

click me!