பாலஸ்தீன பிராந்தியமான காசாவில் இருந்து 260000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
வான், நிலம், கடல் வழியாக இஸ்ரேலின் குண்டுவீச்சுகள் பாலஸ்தீன பகுதிகளை துளைப்பதால், 2,60,000 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காசா பகுதியில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பின் திடீர் தாக்குதலையடுத்து, பதில் தாக்குதலை இஸ்ரேல் தரப்பு துவங்கி உள்ளது. இதனால், இரு தரப்பிகும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
undefined
இந்த நிலையில், காசாவில் இருந்து 2,63,934 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என ஐ.நா. மனிதாபிமான அமைப்பான OCHA தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. சனிக்கிழமைக்கு முன்னதாக தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் சுமார் 3,000 பேர் இடம்பெயர்ந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிக மோசமான தாக்குதலில் சிக்கி அந்நாட்டில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து 900 பேர் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் குண்டுவீச்சால் 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளதாகவும், 560 குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்ததாக OCHA தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன விடுதலை போராளிகளே... இஸ்ரேல் ஹமாஸ் போர் பற்றி மியா கலிபா கூறிய சர்ச்சை கருத்து
காசாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில், சுமார் 1,75,500 பேர் பாலஸ்தீனிய அகதிகளை ஆதரிக்கும் ஐ.நா.வின் UNRWA அமைப்பால் நடத்தப்படும் 88 பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். 14,500 க்கும் அதிகமானோர் 12 அரசுப் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், 74,000 பேர் உறவினர்கள், அண்டை வீட்டாருடன் தங்கியிருக்கலாம் அல்லது தேவாலயங்கள் மற்றும் பிற தங்குமிடங்களில் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இடம் பெயராதவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைப்பது சவாலனதாகி வருவதாகவும் OCHA தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதியில் உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மின்சாரத்தை இஸ்ரேல் துண்டித்துள்ளது. இந்த நடவடிக்கை ஏற்கனவே மோசமாகவுள்ள மனிதாபிமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.