பழைய காசா இருக்காது; போர் விதிகளை மீறிவிட்டோம்; எங்களை கட்டுப்படுத்த முடியாது: இஸ்ரேல் அமைச்சர் ஆவேசம்!!

By Dhanalakshmi G  |  First Published Oct 11, 2023, 11:45 AM IST

இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பயங்கர தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இனி ஒருபோதும் காசா பழைய நிலைக்கு திரும்பாது என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனிய ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று ஐந்தாவது நாளாக பெரிய அளவில் போர் நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் அதிரடியாக ஏவுகணை தாக்குதல்கள் நடத்தினார்கள். இதையடுத்து ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடமான காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதுவரைக்கும் இருதரப்பிலும் நடந்து வரும் போரில் சுமார் 2,100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்படும், அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையே, இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அமெரிக்காவில் இருந்து போர் விமானங்கள், போர் கப்பல்கள் இஸ்ரேல் வந்தடைந்துள்ளது. ஏறக்குறைய 3,00,000-த்துக்கும் அதிகமான இஸ்ரேல் வீரர்கள் களத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். அமெரிக்க வீரர்களும் துணையாக இறங்கியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 3,000 பேர் சாவு; இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்து சேர்ந்த அமெரிக்க ஆயுதங்கள்!

இதற்கிடையே நேற்று இஸ்ரேல் குழந்தைகள் 30 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் கொன்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி இருந்தது. இன்னும் பலரையும் பிணைக்கைதியாக ஹமாஸ் தீவிரவாதிகள் வைத்துக் கொண்டுள்ளனர். முன்னதாக, காசா பகுதியில் மின்சாரம், தண்ணீர், உணவுப் பொருட்களை இஸ்ரேல் நிறுத்தியது.

தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை காசா மீது இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் வீரர்களிடையே அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலன்ட் கூறுகையில், ''காசா மீது பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறோம். இனி பழைய காசாவை பார்க்க முடியாது. இங்குள்ள யதார்த்தத்தை மாற்றும் திறன் உங்களுக்கு இருக்கிறது. காசாவில் மாற்றத்தை ஹமாஸ் விரும்பியது. அவர்கள் நினைத்ததை விட 180 டிகிரி மாறும். 

7 மணிநேரம் பிணக்குவியல் நடுவே கிடந்தேன்: ஹமாஸ் கும்பலிடம் இருந்து தப்பிய பெண் பேட்டி

இந்த தருணத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் வருந்துவார்கள். பெண்களை, குழந்தைகளை அழித்தவர்களை எந்தவித சமரசமும் இல்லாமல் அழிப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம். இன்னும் சில மாதங்களில் நிலைமை மாறும். நாங்கள் காசாவுக்குள் வருவோம்.

போர் விதிகள் அனைத்தையும் நீக்கிவிட்டோம். எதற்கும் நமது வீரர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். ராணுவ நீதிமன்றங்கள் இருக்காது. நான் அனைத்து கட்டுப்பாடுகளையும் விடுவித்துவிட்டேன், நாங்கள் காசா கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுள்ளோம். மேலும் நாங்கள் ஒரு முழு குற்றத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.'

click me!