இஸ்ரேல் நாட்டிற்கு உதவுவதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தாங்கிய முதல் அமெரிக்க விமானம் செவ்வாய் இரவு வந்தடைந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவைத் தாக்கியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியுள்ளது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் காத்திருப்பதால் இந்த உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், காசாவில் ஹமாஸ் குழுவினருடன் நடந்து வரும் போரில் இஸ்ரேல் நாட்டிற்கு உதவுவதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தாங்கிய முதல் அமெரிக்க விமானம் செவ்வாய் இரவு வந்தடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தெற்கு நெகேவ் பாலைவனத்தில் உள்ள நெவாடிம் விமான தளத்தில், மேம்பட்ட போர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிவந்த விமானம் தரையிறங்கியது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
7 மணிநேரம் பிணக்குவியல் நடுவே கிடந்தேன்: ஹமாஸ் கும்பலிடம் இருந்து தப்பிய பெண் பேட்டி
போர் சூழ்நிலையை தீவிரப்படுத்த அல்லது போரை விரிவுபடுத்த விரும்பும் எந்தவொரு சக்தியையும் தடுக்கும் பொருட்டு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் வெளியாகியுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், இஸ்ரேல் மீதான தாக்குதல்களுகுக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் பன்முனைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஹமாஸ் குழுவினர் "தீயசக்தி" என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாவது நாளாக போர் தொடரும் நிலையில், போர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒரு அமெரிக்க விமானம் இஸ்ரேலை அடைந்திருப்பது நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததை இஸ்ரேல் நிராகரித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்கள், ஹமாஸ் மற்றும் அதன் கண்டிக்கத்தக்க பயங்கரவாத செயல்களுக்கு அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"இஸ்ரேல் அரசுக்கு எங்கள் உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவிக்கிறோம். ஹமாஸ் மற்றும் அதன் பயங்கரவாதச் செயல்களுக்கு எங்கள் தெளிவான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்" என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு