7 மணிநேரம் பிணக்குவியல் நடுவே கிடந்தேன்: ஹமாஸ் கும்பலிடம் இருந்து தப்பிய பெண் பேட்டி

By SG Balan  |  First Published Oct 11, 2023, 8:33 AM IST

ஹமாஸ் போராளிகள் தேடிப்பிடித்து சரமாரியாகச் சுடத் தொடங்கினர். அவர்களில் பலர் பலியான நிலையில், 10 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.


இஸ்ரேலில் ஒரு இசை விழாவில் ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது நூற்றுக்கணக்கான மக்கள் எல்லா திசைகளிலும் சிதறி ஓடுவயது காட்சி சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகப் பரவின.

ஹமாஸ் ஆட்கள் கண்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்த நிலையில், பலர் குண்டடிபட்டு துடிதுடித்து விழுந்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த இடத்தில் இருத்த ஒரு பெண், ஏழு மணிநேரம் இறந்தவர்களின் உடல்களுக்கு அடியில் மறைந்திருந்து தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

சுமார் 35 பேர் ஓர் இடத்தில் மறைந்திருந்தனர், அவர்களை ஹமாஸ் போராளிகள் தேடிப்பிடித்து சரமாரியாகச் சுடத் தொடங்கினர். அவர்களில் பலர் பலியான நிலையில், 10 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான லீ சசி தான் கொல்லப்பட்டவர்களின் சடலங்களுக்கு அடியில் மறைந்துகொண்டு உயிர் பிழைத்ததாகக் கூறியுள்ளார்.

சசி தனது தோழி நடாஷாவுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில் அந்த பதைபதைக்க வைக்க அனுபவம் குறித்து விவரித்துள்ளார்.  உரையாடலை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடாஷா, ''ஆமாம், 7 மணிநேரம் இறந்தவர்களின் உடல்களுக்கு அடியில் மறைந்திருந்தார். நான் கேலிக்காகச் சொல்லவில்லை" என்று குறிப்பிட்டு உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகக் கிடைக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை இணைத்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் கும்பலால் கடத்தப்பட்ட 25 வயது பெண் நோவா ஆர்கமணி பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றபடி உதவி கேட்டு அழும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி மனங்களை உலுக்கியது.

நான்காவது நாளாக நீடிக்கும் கடுமையான சண்டையால் செவ்வாய்கிழமை நிலவரப்படி போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்துவிட்டது. காசா எல்லைப் பகுதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

click me!