2.65 லட்சம் உயிர்களை காவு வாங்கி கோரத் தாண்டவம்..! தொடரும் கொரோனாவின் வெறியாட்டம்..!

Published : May 07, 2020, 07:42 AM ISTUpdated : May 09, 2020, 07:43 AM IST
2.65 லட்சம் உயிர்களை காவு வாங்கி கோரத் தாண்டவம்..!  தொடரும் கொரோனாவின் வெறியாட்டம்..!

சுருக்கம்

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ்,  ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.  

கடந்த டிசம்பர் மாதத்தில் சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 38 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 2,65,051 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 38,21,917 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 13,01,725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு 22,55,141 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 48,211 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் நோய் கொடூரமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ்,  ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரையில் 12,63,092 பேருக்கு வைரஸ் பரவி 74,799 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 30,076 பேரும், இத்தாலியில் 29,684 பேரும் மரணமடைந்துள்ளனர். பிற நாடுகளிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா எனும் கொடிய நோயால் நிலைகுலைந்து போயுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Alien Life Research : டைனோசர் முட்டை.. நாசா மிஷனில் பெரிய திருப்பம்... ஆடிப்போன விஞ்ஞானிகள்
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு