கொரோனா தொற்றில் போட்டி போடும் வல்லரசுகள்..!! அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா..!!

By Ezhilarasan Babu  |  First Published May 6, 2020, 5:50 PM IST

ரஷ்யாவின் தொற்றுநோய் மையமாக உருவாகியுள்ள மாஸ்கோவில் மட்டும் இதுவரை சுமார் 85 ஆயிரத்து 973 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  அது மட்டுமின்றி அங்கு 866 பேர் உயிரிழந்துள்ளனர்


ரஷ்யாவில் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நாளொன்றுக்கு சுமார் பத்தாயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இதனால்  ஐரோப்பிய நாடான ஜெர்மனியை பின்னுக்குத்தள்ளி கொரோனா வைரஸ் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளது .   இன்னும் ஒரு சில நாட்களில் அதன் எண்ணிக்கை இத்தாலி ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை விஞ்சும் என கணிக்கப்பட்டுள்ளது , உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதுவரை உலக அளவில்  37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் , சுமார்  2.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் .  இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 12 லட்சத்து 38 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது .  அங்கு மட்டும் உயிரிழப்பு 72 ஆயிரத்தை கடந்துள்ளது , அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. 

Latest Videos

கொரோனா  மற்ற நாடுகளில் தீவிரம் காட்டிய போது அதிலிருந்து விலகி இருந்த ரஷ்யாவில் தற்போது  இந்த வைரஸ்  உச்சகட்டத்தை அடைந்துள்ளது,  கடந்த ஒரு சில வாரங்களிலேயே ரஷ்யா மற்றும் அதன் தலைநகர் மாஸ்கோ கொரோனா வைரசின் மயமாகவே மாறியுள்ளது .  தற்போதைய ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை மிஞ்சும் அளவிற்கு கொரோனா ரஷ்யாவில் தீவிரம் காட்டி வருகிறது.  இது குறித்து புதன்கிழமை தெரிவித்துள்ள ரஷ்ய சுகாதார அதிகாரிகள் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 559 புதிய கொரோனா தொற்று பதிவாகியிருப்பதாக கூறியுள்ளனர்.  இதுவரை அங்கு உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது .  ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1537 மட்டுமே ,  தற்போது ரஷ்யாவில் உயர்ந்துள்ள வைரஸ் எண்ணிக்கை அந்நாட்டை கொரோனா பாதிப்பு பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. 

மற்ற நாடுகளை விட ரஷ்யாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவினாலும் அங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே உள்ளது ,  மே 11ஆம் தேதி வரை ரஷ்யாவில் ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,  வைரஸ் தொற்று பரவல் அடித்த நாட்களில் எப்படி  உள்ளது என்பதை அறிந்து அதை நீட்டிப்பதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  இந்நிலையில் நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் படிப்படியாக ஊரடங்கு விளக்குவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார் ,  தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என அவர் கவலைப் படுவதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  ரஷ்யாவின் தொற்றுநோய் மையமாக உருவாகியுள்ள மாஸ்கோவில் மட்டும் இதுவரை சுமார் 85 ஆயிரத்து 973 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  அது மட்டுமின்றி அங்கு 866 பேர் உயிரிழந்துள்ளனர் . 

இதுவரையில் மாஸ்கோவில் மட்டும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக நகர துணை மேயர் அனஸ்தேசியா ரகோவா கூறியுள்ளார் ரஷ்யா முழுவதும் பல மருத்துவமனைகளில் நோயாளிகளால் நிரம்பி வழிவதால் நாட்டின் புகழ்பெற்ற கண்காட்சி மையமான வி.டி.என்.கே  மைதானத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனைகளை அமைக்க மாஸ்கோ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் . அதே நேரத்தில் பெரும்பாலான மருத்துவர்கள் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகாரணங்கள் இல்லை என்றும் கூறிவரும் நிலையில் இதுவரை மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என 111 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

 

click me!