சிங்கப்பூரர்களே குடை எடுக்க மறக்காதீங்க - அக்டோபரின் 2ம் பாதியில் செம மழை பெய்யப்போகுது - வானிலை ஆய்வு மையம்!

By Ansgar R  |  First Published Oct 17, 2023, 8:42 PM IST

Singapore : சிங்கப்பூரில் எதிர்வரும் வரும் 13 நாட்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது, இது வெப்பமான வானிலைக்கு சிறிது ஓய்வு அளிக்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் நேற்று அக்டோபர் 16, 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்த அக்டோபர் மாதத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, வெப்பநிலையும் குறைவாக இருக்கும் என்றும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 33°C முதல் 34°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் பிற்பகல்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மைனர் சிறுமியை கற்பழிக்க இளைஞன் வேடம்.. வசமாய் சிக்கிய நபர் - அதிரடி தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்!

Tap to resize

Latest Videos

சில நாட்களில் மதியம் துவங்கும் மழை, மாலை வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் எதிர்வரும் இந்த 13 நாட்களில், சிங்கப்பூரின் சில பகுதிகளில் காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் குறுகிய கால இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மொத்தத்தில், அக்டோபர் 2023 இன் இரண்டாம் பாதியில் சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மூடுபனி ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்

வரும் பதினைந்து நாட்களில் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது மூடுபனி நிலைமையில் சில முன்னேற்றங்களைக் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக புகை மண்டலத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக சிறிய மழை பெய்த சில நாட்களைத் தவிர, அக்டோபர் 2023 இன் முதல் பாதி வறண்ட மற்றும் சூடான மாதமாக இருந்தது. குறிப்பாக அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 34°Cக்கு மேல் உயர்ந்தது. குறிப்பாக அக். 9 அன்று, தீவின் பல பகுதிகளில் வெப்பநிலை 35°C ஐத் தாண்டியது.

தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. இஸ்ரேலில் "Bomb Shelter" எப்படி இருக்கும் தெரியுமா? - ஒரு Exclusive பார்வை!

click me!