தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. இஸ்ரேலில் "Bomb Shelter" எப்படி இருக்கும் தெரியுமா? - ஒரு Exclusive பார்வை!

By Ansgar R  |  First Published Oct 17, 2023, 6:18 PM IST

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடும் போர் நிலவி வருகின்றது, தினந்தொன்றும் பலநூறு மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் மக்கள் எப்படி வெடிகுண்டுகளிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதை இந்த பதிவில் சில Exclusive தகவல்களுடன் காணலாம்.


பெரும்பாலும் கட்டிட அடித்தளங்களில் அமைந்துள்ள வெடிகுண்டு தங்குமிடங்கள் (பாம் ஷெல்டர்), இதுபோன்ற தாக்குதல்களின் போது உயிர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த தங்குமிடங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு வெடிப்புகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வலுவான இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 

ஏசியாநெட் சுவர்ணா நியூஸின் செய்தி ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர், இஸ்ரேலின் அஷ்கெலோனில் உள்ள அத்தகைய தங்குமிடத்திற்குச் சென்று அங்குள்ளவற்றை பற்றி விளக்கியுள்ளார். இந்த தங்குமிடங்கள் உறுதியான இரும்பு கதவுகள், அத்தியாவசிய வசதிகள் மற்றும் இருவழி பூட்டு அமைப்புடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளன, தீவிரவாதிகளுடனான இரவு நேர மோதல் உட்பட பல தாக்குதல்களின் போது பாதுகாப்பை உறுதி செய்கிறது இந்த இடம்.

Tap to resize

Latest Videos

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: தலைநகரில் சூழ்நிலை எப்படியிருக்கு.? காசாவில் நடப்பது என்ன.?

ஹமாஸ், இஸ்ரேலிய நகரங்களை நோக்கி சரமாரியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலிய குடிமக்கள் வெடிகுண்டு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பெரும்பாலும் கட்டிடங்களின் அடித்தளத்தில் அமைந்துள்ள இந்த வெடிகுண்டு முகாம்கள் ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளன என்று தான் கூறவேண்டும்.

ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் எடிட்டர் அஜித் ஹனமக்கனவர் இஸ்ரேலின் அஷ்கெலோனில் உள்ள அத்தகைய வெடிகுண்டு தங்குமிடம் ஒன்றை பார்வையிட்டார். இந்த வெடிகுண்டு தங்குமிடங்களில் வலுவான இரும்பு கதவுகள் உள்ளன, அவை தடிமனான மற்றும் மீள்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. ஏவுகணைத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புகளைத் தாங்கும் திறன் கொண்டவை இவை. முக்கியமாக, கதவுகளில் இருவழி பூட்டு அமைப்பு உள்ளது, இது உள்ளே இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

அந்த தங்குமிடங்களுக்குள், படுக்கைகள், தண்ணீர் வசதி, கழிப்பறைகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் உள்ளன. தீயை அணைக்க தண்ணீர் வசதியும் உள்ளது. இந்த விரிவான தயாரிப்பு, தாக்குதல்களின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவர்களின் அடிப்படை மனித தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. 

ஏவுகணைத் தாக்குதல்கள் பெரும்பாலும் இரவில் நிகழும் என்பதால், மக்கள் சில நேரங்களில் தங்குமிடங்களிலேயே இரவைக் கழிக்கிறார்கள், குறிப்பாக இஸ்ரேலிய இராணுவம் மற்றும் போராளிகள் தீவிரமாக போரில் ஈடுபடும்போது அவர்கள் அந்த தங்குமிடங்களுக்கு செல்கின்றனர்.

இஸ்ரேல் - காசா யுத்த களத்தில் சைரன் ஒலிக்கு நடுவே ஏசியாநெட் செய்தியாளர் அஜித்தின் நேரடி ரிப்போர்ட்!!

click me!