Singapore : சிங்கப்பூரில் 16 வயது சிறுவன் போல் நடித்து, நடுத்தர வயதுடைய ஒருவர், பள்ளி மாணவியை கற்பழித்த கொடூரம் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது. இதுபோல பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
16 வயது சிறுவன் போல் நடித்து, நடுத்தர வயதுடைய ஒருவர், 12 வயதுடைய பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு கொண்டுள்ளார். பிறகு அந்த சிறுமியை சந்திக்க ஏற்பாடு செய்து, அந்த சிறுமி தன்னை விட வயதில் பெரிய அளவில் சிறியவர் என்பது தெரிந்திருந்தும், அவருடன் மூன்று முறை உடலுறவு கொண்டுள்ளார் அந்த நபர்.
கடந்த 2015ம் ஆண்டு, வேறொரு 13 வயது சிறுமி சம்மந்தப்பட்ட பாலியல் வழக்கில் சிக்கி, சிறை சென்று வந்த பிறகு அந்த நபர் செய்த காரியம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. முஹம்மது ஹுத்ரி அஹ்மத் என்ற அந்த நபருக்கு இப்பொது 44 வயதாகிறது, அவர் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை நேற்று அக்டோபர் 16 (திங்கட்கிழமை) அன்று அவர் ஒப்புக்கொண்டார்.
ஹமாஸ் யார்? பாலஸ்தீனம் இஸ்ரேலுடன் இவர்களுக்கு என்ன பகை? ஹமாஸின் பிரம்மாண்ட சுரங்கப்பாதைகள்!!
சிங்கப்பூர் நாட்டு ஊடகங்கள் அளித்துள்ள தகவலின்படி, அவர் செய்த குற்றங்களுக்காக அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 18 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது. மைனர் ஒருவரை கற்பழித்த குற்றம், இளைஞர் ஒருவருடனான பாலியல் குற்றம் உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகள் அவருடைய தீர்ப்பின்போது கணக்கில்கொள்ளப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடந்த 2020ம் ஆண்டு சிங்கப்பூர் மனநல நிறுவனம் (IMH) மூலம் ஹுட்ரி (குற்றவாளி) ஒரு paedophile என கண்டறியப்பட்டது. paedophile என்பது குழந்தைகள் மீது பாலியல் ரீதியான ஈர்ப்பு கொண்டவர். அவர் 11 முதல் 15 வயது வரையிலான சிறுமிகளை பாலியல் ரீதியாகக் அணுகுபவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்து ரசித்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மே 2015ல், ஹுட்ரி 13 வயது சிறுமியை ஏமாற்றி தன்னுடன் உடலுறவு கொள்ள இதேபோன்ற முறைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் அவளைத் தொடர்புகொண்டு, 18 வயது இளைஞனாகக் தன்னை காட்டிகொண்டு, அந்த சிறுமியை தனது காதலியாக மாற்ற வற்புறுத்தியுள்ளார். மறுநாள் இருவரும் சந்தித்து உடலுறவு கொண்டுள்ளனர். இந்த குற்றத்திற்காக, 2016 இல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 40 மாத (3.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: தலைநகரில் சூழ்நிலை எப்படியிருக்கு.? காசாவில் நடப்பது என்ன.?