sri lanka economic crisis: tamilnadu:தமிழகத்தின் மனிதநேயம்: உணவு, நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைப்பு

By Pothy Raj  |  First Published Jul 26, 2022, 2:35 PM IST

தமிழகத்திலிருந்து 3-வதுமுறையாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரிசி, பால் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அந்நாட்டு அரசிடம் இந்தியத் தூதரகம் ஒப்படைத்தது என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.


தமிழகத்திலிருந்து 3-வதுமுறையாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரிசி, பால் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அந்நாட்டு அரசிடம் இந்தியத் தூதரகம் ஒப்படைத்தது என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 
தமிழக அ ரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை, இலங்கையின் இந்தியத் தூதர் கோபால் பாக்லே, இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரே மற்றும் சுகாதார மற்றும் நீர்பாசனத் துறை அமைசச்ர் கெலியா ரம்புகுவேலா ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

Tap to resize

Latest Videos

rahul : rahul arrested: 'மோடிதான் ராஜா': டெல்லியில் கைதுக்குப்பின் ராகுல் காந்தி விமர்சனம்

இ்ந்திய அரசும், மக்களும் இலங்கை மக்களுக்காக ஆதாரவாக உள்ளனர். தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலங்கை மதிப்பில் ரூ.3.40 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளது

இலங்கைக்கு அரசுக்கு இதுவரை  40ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்பவுடர், 100 டன் மருந்துகள் இந்தியா வழங்கி உதவியுள்ளது.

இலங்கைத் தமிழர் தலைவர் ஜீவன் தொண்டைமான் அளித்த பேட்டியில் “தமிழகத்திலிருந்து 3வது முறையாக நிவாரணப் பொருட்களைப் பெறுகிறோம். தக்க தருணத்தில் தேவையறிந்து உதவிய தமிழகத்துக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்

Sri Lanka: கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய சர்வதேச அமைப்பு சிங்கப்பூரில் வழக்கு!!

இதற்கு முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தார்.

பொருளாதாரச் சீரழிவால் சிக்கித் தவிக்கும்இலங்கை மீண்டெழுவதற்காக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அரசு சார்பில் இதுவரை 400 கோடி டாலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமடைந்து, அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாமல் தடுமாறுகிறது. வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல்,டீசல், சமையல் கேஸ் இறக்குமதி செய்ய முடியாமல், அதற்கு பணம் வழங்க முடியாமல் தவிக்கிறது. உணவுப் பொருட்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய இலங்கை அரசிடம் பணம் இல்லை.

இலங்கையில் போதிய உணவு கிடைக்காமல் 60 லட்சம் மக்கள் பரிதவிப்பு; அலற வைக்கும் புள்ளி விவரங்கள்!!

உலகளவில் கடன் பெற்றுள்ள இலங்கை அரசுக்கு தங்கள் மக்களின் தேவையை நிறைவேற்ற அடுத்த 6 மாதத்துக்கு 500 கோடி டாலர் தேவைப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச செலாவணி நிதியம், வெளிநாடுகளிலும் உதவிக்காக இலங்கை பேச்சு நடத்தி வருகிறது.


 

click me!