பிரிட்டன் பாதுகாப்புக்கும், உலகப் பாதுகாப்புக்கும் சீனாதான் நம்பர் ஒன் அச்சுறுத்தலாக இருக்கிறது. அந்தநாட்டுக்கு எதிராக கடினமான கொள்கைகள் பின்பற்றப்படும் என்று பிரிட்டன் முன்னாள் நிதிஅமைச்சர் ரிஷி சுனாக் தெரிவித்தார்
பிரிட்டன் பாதுகாப்புக்கும், உலகப் பாதுகாப்புக்கும் சீனாதான் நம்பர் ஒன் அச்சுறுத்தலாக இருக்கிறது. அந்தநாட்டுக்கு எதிராக கடினமான கொள்கைகள் பின்பற்றப்படும் என்று பிரிட்டன் முன்னாள் நிதிஅமைச்சர் ரிஷி சுனாக் தெரிவித்தார்
பிரிட்டனின் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்ஸன் ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமருக்கான போட்டி எழுந்துள்ளது.
இதில் ஆளும் பழமையாத கட்சியின் சார்பில் ரிஷி சுனாக்கும், மற்றொருஅமைச்சரான லிஸ் ட்ரஸ் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
இந்நிலையில் சீனாவுக்கும், பிரிட்டனுக்கும்இடையிலான உறவு குறித்து ரிஷி சுனாக் பேசுகையில் கடினமான முறைகளைப் பின்பற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார் ஆனால், சீனாவின் அரசு சார்பில் நடத்தப்படும் குளோபல் டைம்ஸ் குறிப்பிடுகையில் “ பிரிட்டன் சீனா உறவை ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுக்க சுனாக் சிறந்தவர் எனத் தெரிவித்துள்ளது.
சீனா குறித்து ரிஷி சுனாக் குறிப்பிடுகையில் “நான் பிரதமராக வந்தால், சீனாவுடன் பிரிட்டன் உறவு கடுமையாக இருக்கும். பிரிட்டனுக்கு மட்டுமல்ல உலகிற்கே சீனா நம்பர் ஒன் அச்சுறுத்தல்.
பிரிட்டனில் இருக்கும் 30 கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுப்பேன். சீனாவின் கலாச்சாரம், மொழி சத்தமில்லாமல் பிரிட்டனில்பரவுவதைத் தடுப்பேன்.
பிரிட்டன் பிரதமர் போட்டியில் முந்தும் ரிஷி சுனக்..இவர்தான் அடுத்த பிரதமரா ?
நம்முடைய பல்கலைக்கழகங்களி்ல் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி துரத்தப்படும். 50ஆயிரம் பவுண்ட்களுக்கு வரும் அந்நியநாடு உதவித்தொகை வெளிப்படையாக அறிவிக்கப்படும். ஆய்வுத தொடர்பான கூட்டுஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும்.
சீனாவின் உளவுதுறையை முறியடிக்க பிரிட்டனின் உளவு அமைப்பான எம்15பயன்படுத்தப்படும். சீனாவின் சைபர் தாக்குதல், மிரட்டலைத் தடுக்கும் வகையில் நேட்டோஅமைப்பு போன்று சர்வதேசஒத்துழைப்பு கோரப்படும்
பிரிட்டனில் சீன நிறுவனங்கள் சொத்துக்களை வாங்குதல், கையகப்படுத்துதல் தடுக்கப்படும். உள்நாட்டில் நம்முடைய தொழில்நுட்பங்களைத் திருடி, நமது பல்கலைக்கழகத்துக்குள் சீனா ஊடுருவுகிறது.
சீனாவின் உலகநாடுகளை இணைக்கும் சாலைத் திட்டம், வளர்ந்துவரும் நாடுகளை மிகப்பெரிய கடனில் தள்ளுகிறது. சொந்த மக்களையே கொடுமைப்படுத்தி,கைது செய்கிறது. குறிப்பாக ஜின்ஜியாங், ஹாங்காங்கில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. தங்கள் கரன்ஸியின் மதிப்பை கட்டுப்படுத்துவதால், சர்வதேச பொருளாதாரத்தை தங்களுக்கு ஆதரவாகத்திரட்டி வருகிறார்கள்.
அடுத்த பிரிட்டன் பிரதமர் இவரா ? ரேஸில் முந்தும் இந்திய வம்சாவளி.. யார் இந்த ரிஷி சுனக் ?
போதும், போதும். நீண்டகாலமாக, பிரிட்டின் அரசியல்வாதிகள் சிவப்புக்கம்பளம் விரி்த்து ஏதும் தெரியாமல் சீனாவை அழைத்துவந்தார்கள். நான் பிரதமராகா பதவி ஏற்ற முதல்நாளில் இருந்து இது மாறும்
இவ்வாறு ரிஷி சுனாக் தெரிவித்தார்