Sri Lanka: கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய சர்வதேச அமைப்பு சிங்கப்பூரில் வழக்கு!!

By Dhanalakshmi G  |  First Published Jul 25, 2022, 12:40 PM IST

சிங்கப்பூரில் தற்காலிகமாக தங்கி இருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை  கைது செய்ய வேண்டும் என்று தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சர்வதேச உண்மை மற்றும் நீதி அமைப்பு சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலிடம்  புகார் அளித்துள்ளது. 


சிங்கப்பூரில் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்காலிகமாக தங்கி இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்று தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சர்வதேச உண்மை மற்றும் நீதி அமைப்பு சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலிடம்  புகார் அளித்துள்ளது. 

இலங்கையின் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததற்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என்று அந்த நாட்டு மக்கள் கோபத்தின் உச்சியில் உள்ளனர். பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை போராட்டக்காரர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே முதலில் மாலத்தீவுக்கு மனைவியுடன் தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து சிங்கப்பூரில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்து இருக்கின்றார்.

Tap to resize

Latest Videos

இலங்கையில் போதிய உணவு கிடைக்காமல் 60 லட்சம் மக்கள் பரிதவிப்பு; அலற வைக்கும் புள்ளி விவரங்கள்!!

சிங்கப்பூரில் தங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் 15 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. அங்கு அதற்கு மேல் கோத்தபய ராஜபக்சே தங்க முடியாது. இந்த நிலையில் 2009ஆம் ஆண்டில்  நடந்த போர்க்குற்றம் தொடர்பாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலிடம் கொடுக்கப்பட்டு இருக்கும் புகாரில், ''2009 ஆம் ஆண்டு இலங்கையில் இனப்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஜெனீவா ஒப்பந்த விதிகளை மீறி கோத்தபய ராஜபக்சே செயல்பட்டார். போரின்போது, அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.  இந்த குற்றங்களுக்காக குற்றம் புரிந்தவர் மீது சிங்கப்பூரில் வழக்கு தொடர முடியும் என்ற விதி இருக்கிறது. அதன்படி இந்தப் புகாரை அளித்துள்ளோம்.

 

இலங்கை உள்நாட்டுப் போரின்போது கொலை, மரணதண்டனை, சித்திரவதை மற்றும் கற்பழிப்பு மற்றும் பிற வகையிலான பாலியல் வன்முறைகள், சுதந்திரம் பறிப்பு, கடுமையான உடல் மற்றும் மன பாதிப்புகள் மற்றும் பட்டினி போன்ற துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். 

கடந்த 2008ஆம் தேதி போர் களத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் மற்றும் நிவாரணம் அளித்து வந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோத்தபய கேட்டுக் கொண்டார். அவர்கள் அங்கு இருந்தால், இலங்கை தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு சாட்சியங்களாகி விடுவார்கள் என்று வெளியேற்றப்பட்டனர். எனவே இந்த குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தில் இருந்து கலைப்பொருட்கள் மாயம்!! 

இதற்கு முன்பும் இதே அமைப்பு 2019 ஆம் ஆண்டில், கலிபோர்னியாவில் இதே குற்றச்சாட்டின் கீழ் கோத்தபய மீது வழக்குப் பதிவு செய்து இருந்தது. கோத்தபய அமெரிக்க குடியிரிமை பெற்று இருப்பதால், அங்கு வழக்கு பதியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்தாண்டு அதிபரானதைத் தொடர்ந்து அவர் மீதான வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், தற்போது சிங்கப்பூரில் தொடுக்கப்பட்டு இருக்கும் வழக்கு குறித்து அட்டார்னி ஜெனரல் அலுவகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சிங்கப்பூரில் தனிப்பட்ட பயணமாகத்தான் கோத்தபய ராஜபக்சே வந்திருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

click me!