குரங்கு அம்மை நோயை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார மையம் இன்று பிரகடனம் செய்துள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு எதிராக உலக நாடுகள் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் பெரிய அளவில் பாதித்து வருகிறது. இந்தியாவிலும் இதுவரைக்கும் மூன்று பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள். தற்போது அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பயங்கரமாக பரவி வருகிறது. இதையடுத்து தற்போது உலக சுகாதார இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.
undefined
இன்று உலக சுகாதார மையத்தில் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் இயக்குனர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேசஸ் கூறுகையில், ''குரங்கு அம்மை நோய் பரவல் தற்போது உலக நாடுகளின் பொது சுகாதார அவசர நிலையையாக மாறி இருப்பதாக நான் முடிவு செய்து இருக்கிறேன். நாடு முழுவதும் தற்போது பரவி வரும் இந்த நோயை திறமையான ஆலோசனைகள் மற்றும் கையாளுதல் முறைகளில் கட்டுப்படுத்த வேண்டும். உலக சுகாதார அமைப்பில் இருக்கும் 75 நாடுகளில் 16,000 பேருக்கும் மேல் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. 5 பேர் இறந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..Monkeypox Virus: குரங்கு அம்மை நோய் பாதிப்பை எத்தனை நாட்களில் கண்டறியலாம்..? நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
உலக நாடுகள் இணைந்து செயல்பட்டு, திறன் வாய்ந்த தகவல்களை பறிமாறி ஒருங்கிணைந்து செயல்பட்டு குரங்கம்மை நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்கிறோம். இதுவரைக்கும் குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. நோய் கண்டறிந்தவர்கள் தங்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்கும்'' என்று தெரிவித்தார்.
இதுவரைக்கும் நடந்த ஆய்வுகளில், குரங்கு அம்மை பரவியவர்களில் 98 சதவீதம் பேர் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் பை செக்சுவல் நபர்களாகவே உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி இதழ் சமீபத்தில் தெரிவித்து இருந்தது. குரங்கு அம்மை தாக்கினால் இதன் தாக்கம் 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும். முதல் ஐந்து நாட்களுக்கு காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகு வலி காணப்படும். பின்னர் முகம், கை, கால்கள் என்று அம்மையின் தாக்கம் கொப்பளம் போன்று தோன்றும். சின்னம்மை நோயை விட குரங்கு அம்மை தாக்கம் குறைவானதாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை... மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி!!