இலங்கைக்கான உதவியை நிறுத்துங்கள்… ஜப்பானிடம் ரணில் கூறியது அம்பலம்!!

By Narendran S  |  First Published Jul 25, 2022, 6:22 PM IST

இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜப்பானிடம் தெரிவித்தது அம்பலமாகியுள்ளது. 


இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜப்பானிடம் தெரிவித்தது அம்பலமாகியுள்ளது. இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து மக்கள் அரசு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய சர்வதேச அமைப்பு சிங்கப்பூரில் வழக்கு!!

Tap to resize

Latest Videos

இந்த போராட்டம் வலுத்த நிலையில் கோட்டபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.  மேலும் அவர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார். இதை அடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இருந்த போதிலும் மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனிடையே இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையில் உரையாடல் நடந்துள்ளது.

இதையும் படிங்க: சீனா நம்பர் ஒன் அச்சுறுத்தல்! விடமாட்டேன்: வரிந்து கட்டும் ரிஷி சுனாக் நீ்ண்ட திட்டம்

Newly elected President of Sri Lanka Ranil Wickremesinghe, then opposition leader, asked Japan to suspend economic assistance to Sri Lanka [2007] – Japan responded people should not be punished “for acts of commission and omission by their leaders” https://t.co/qc45S5DSfj pic.twitter.com/MjUTGdc8PX

— WikiLeaks (@wikileaks)

அது தொடர்பான ஆவணத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 2007ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரியிருந்தார். அதற்கு ஜப்பான் அளித்த பதிலில், இலங்கை நாட்டின் தலைவர்கள் கமிஷன் பெற்றுக் கொள்வதனாலும், மக்களை உதாசீனம் செய்வதனாலும் அந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது. எனவே உதவி வழங்குவதனை நிறுத்த முடியாது என்று ஜப்பான் பதிலளித்ததாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!