
இந்தோனேசியாவில் நடந்து வரும் 17வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோரை அதிகாரபூர்வமற்ற முறையில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் 17வது ஜி-20 உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் கருத்துருவாக, ஒன்றாக மீண்டெழுவோம், வலிமையாக மீண்டெழுவோம்” என்ற வாசகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா சென்றார். ஜி20 மாநாட்டின் முதல்நாளான இன்று நடந்த உணவுப் பாதுகாப்பு, எரிபொருள் பாதுகாப்பு என்ற தலைப்பில் பிரதமர்மோடி காலையில் பேசினார். அப்போது, “ உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
ஜி20 உச்சி மாநாட்டில் கைகோர்த்த சீனா - அமெரிக்கா.. ஆப்சென்ட் ஆன ரஷ்யா.. ஏன் தெரியுமா ?
அமைதிப் பேச்சு மூலம் அனைத்துக்கும் தீர்வுகாண வேண்டும். 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பாதிக்கு மேல் புதுப்பிக்கத்தக்கசக்தியில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். உரத்தட்டுப்பாடு, உணவுச்சிக்கலுக்கு கொண்டு செல்லும்” எனத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் இடையே பிரிட்டனின் புதிய பிரதமரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் வந்தபின் முதல்முறையாக பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். கூட்டத்தில் பிரதமர்மோடி பேசி முடித்ததும், அவரைத் தேடி வந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
உக்ரைனில் போர் நிறுத்தம் தேவை:இன்றைய உரத் தட்டுப்பாடு நாளைய உணவுச் சிக்கல்: பிரதமர் மோடி பேச்சு
இந்தோனேசிய அதிபர் ஜேக்கப் விடோடோவுடன் நாளை பிரதமர் மோடி சந்தித்துப் பேசஉள்ளார். இந்தச் சந்திப்பு முடிந்தபின், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனையும் சந்திக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இது தவிர இன்று செனகல் அதிபரும், ஆப்பிரிக்க யூனியன் தலைவருமான மெக்கே ஷால், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். நெதர்லாந்து அதிபர் மார்க் ருட்டேவையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.