World Population: உலக மக்கள் தொகை இன்று 800 கோடியை எட்டுகிறது: சீனாவை முந்தும் இந்தியா: ஐ.நா. அறிவிப்பு

By Pothy Raj  |  First Published Nov 15, 2022, 11:47 AM IST

உலகின் மக்கள் தொகை இன்று (நவம்பர்15) 800 கோடியை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. 


உலகின் மக்கள் தொகை இன்று (நவம்பர்15) 800 கோடியை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. 

ஐ.நா.வின் கணிப்பின்படி நவம்பர் 14ம் தேதிவரை, உலகின் மக்கள் தொகை 799.99 கோடிக்கும் அதிகமாக இருந்தது. இன்று உலகின் மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என்று கணித்துள்ளது.

Tap to resize

Latest Videos

உக்ரைனில் போர் நிறுத்தம் தேவை:இன்றைய உரத் தட்டுப்பாடு நாளைய உணவுச் சிக்கல்: பிரதமர் மோடி பேச்சு

வரும் 2023ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும். அதன்பின் உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஜி20 உச்சி மாநாடு - தலைமை பொறுப்பேற்கும் பிரதமர் மோடி.. எதை பற்றி விவாதிக்க போகிறார்கள் ?

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஐ.நா. மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டது. அதில், உலகின் மக்கள் தொகை எண்ணிக்கை 2080களில் 1000 கோடியை கடந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில் “ இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினம், மைல்கல் ஆண்டில்வந்துள்ளது. 2022ம் ஆண்டில்தான் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்ட உள்ளது. நம்முடைய பன்முகத்தன்மை, பொதுவான மனிதநேயம், சுகாதாரத்தில் முக்கியத்துவம் ஆகியவற்றை அனைவரும் கொண்டாட வேண்டிய நேரம்.

சுகாதாரம், மருத்துவத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், மக்களின் வாழ்நாள் வயது அதிகரித்துள்ளது, மகப்பேறு காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகள், சிசு மரணங்கள் குறைந்துள்ளன. அதே சமயம், இது நமது பூமியை பராமரிப்பதற்கு நமக்கு இருக்கும் பொறுப்பையும், ஒருவருக்கொருவர் நமது கடமைகளை நாம் எங்கே இழக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கவும்  இது தருணமாகும்”எ னத் தெரிவித்துள்ளார்

கடந்த 1950ம் ஆண்டுக்குப்பின் உலகின் மக்கள் தொகை குறைவான வேகத்தில் அதிகரித்துள்ளது. அதாவது உலகின் மக்கள் தொகை ஒருசதவீதம் வீதத்தில்தான் அதிகரித்துள்ளது. 2030ம் ஆண்டில்உலகின் மக்கள் தொகை 830 கோடியாகவும்,  2050ம் ஆண்டில் 970 கோடியாகவும் அதிகரிக்கும் என ஐ.நா. கணித்துள்ளது.
2080ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை ஆயிரம் கோடியைக் கடக்கும், அதன்பின் 2100ம் ஆண்டுவரை அதே அளவில்தான் இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பற்றி ஆலோசிப்பேன்:பிரதமர் மோடி அறிவிப்பு

உலகின் பல நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் குழந்தைப் பேறுதன்மை குறைந்துள்ளது. உலக நாடுகளில் மூன்றில் 2 பங்கு பெண்கள், வாழ்நாளில் 2 குழந்தைக்கும் குறைவாக பெற்றுக்கொள்ளும் நாடுகளில், அல்லது பகுதிகளில்தான் வாழ்கிறார்கள். 

2022 முதல் 2050ம் ஆண்டுகளில் 61 நாடுகளில் மக்கள் தொகை அளவு ஒரு சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகக் குறையக்கூடும். அதநேரம், 8 நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மக்கள் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ள நாடுகளில், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கலாம்எ ன ஐ.நா. தெரிவித்துள்ளது
 

click me!