mike tyson:ferrari s.p.a.: boxing: மைக் டைசனின் அரிதான ஃபெராரி எப்-50 கார் ஏலம்: ரூ.3.19 கோடிக்கு விலை போனது

By Pothy RajFirst Published Aug 23, 2022, 3:41 PM IST
Highlights

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தனது அரிதான ஃபெராரி(Ferrari F50)எப்50 ரக காரை ஏலத்துக்கு அனுப்பியுள்ளார். இந்த கார் 42 லட்சம் டாலர்கள்(ரூ.3.35கோடி) விலைக்கு வாங்கப்பட்டது.

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தனது அரிதான ஃபெராரி(Ferrari F50)எப்50 ரக காரை ஏலத்துக்கு அனுப்பியுள்ளார். இந்த கார் 42 லட்சம் டாலர்கள்(ரூ.3.35கோடி) விலைக்கு வாங்கப்பட்டது.

உலகக் குத்துச்சண்டையில் கடந்த 1990களில் சாம்பியனாக வலம் வந்தவர் அமெரிக்க வீரர் மைக் டைசன். மிகப்பெரிய கார் ரசிகரான மைக் டைசன், குத்துச்சண்டைப் போட்டிகளில் வென்று கோடிக்கணக்கில் டாலர்களை சாம்பாதித்தபோது விலை உயர்ந்த கார்களை வாங்கிக் குவித்தார்.

வேலை செய்யுங்கள்; இல்லாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள்… இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அதிரடி!!

அந்த வகையில் மைக் டைசனிடம் ஃபெராரி, பென்ட்லி, லம்போர்ஹினி, ரோல்ஸ் ராய்ஸ் என ஏராளமான கார்களைக் வாங்கிக் குவித்தார். அப்படி அவர் வாங்கியதில் முக்கியமாந கார் ஃபெராரியின் எப்50 என்ற மாடல் கார். ஃபெராரி நிறுவனத்தால் மிகவும் குறைவான அளவில்தான் இந்த கார்கள் தயாரிக்கப்பட்டன. 

அமெரிக்கச் சந்தையில் மொத்தமே ஃபெராரி எப்50 மாடலில் 55 கார்கள் மட்டுமே உள்ளன. உலகம் முழுதும் 349 கார்கள் ஓடுகின்றன, அதில் 73-வது கார் மைக் டைசனுக்குரியதாகும். 

மிகவும் குறைவாக மைலேஜ் கிடைக்கும் ஃபெராரி எப்50 கார் 4.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 513 குதிரைத்திரனை வெளிப்படுத்தும், 8500 ஆர்பிஎம் கிடைக்கும். 3.6 வினாடிகளில் இந்த காரின் மூலமம் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்ல முடியும், அதிகபட்சமாக 202 கி.மீ வேகத்தில் கார் பயணிக்கும்.

இம்ரான் கான் கைதாகிறார்? தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு வழக்கு

கடந்த 1996ம் ஆண்டு ஃபெராரி எப்50 காரை மைக் டைசன் வாங்கும்போது, இதன் விலை 6.50 லட்சம் டாலராகும். அந்த நேரத்தில் ஃபெராரி 456ஜிடி ஸ்பைடர் ரக காரையும் மைக் டைசன் வாங்கினார்.
ஆனால், இப்போது, ஃபெராரியின் எப்50 ரக காரை மட்டும் டைசன் விற்றுள்ளார். அமெரி்க்காவின் குட்டிங் அன்ட் கம்பெனி மூலம் இந்த கார் ஏலம் விடப்பட்டது. 

இந்தக் காரை 42 லட்சம் டாலருக்கு, விலை போயுள்ளது. இந்த காரை டைசன் வாங்கும்போது, உலக குத்துச்சண்டை நாக்அவுட் சுற்றில் பிராங்க் ப்ரூனோவை வீழ்த்திவிட்டு இந்த காரில் டைசன் புறப்பட்டுச் சென்றார்.

இலங்கை மக்கள் கண்ணீர்! மண்எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு:

2016ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் மைக் டைசன் கார்கள் பற்றி கூறுகையில் “ எனக்குப் பிடித்த கார்களில் ஃபெராரி முக்கியமானது. அந்த காரில் ஏறி அமர்ந்தாலே நான் கைதியாகிவிடுவேன். அதன்பின் கார் வேகத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஃபெராரியை ஓட்டத் தெரியாது”எனத் தெரிவித்தார்.

கடந்த 2005ம் ஆண்டு குத்துச்சண்டைப்  போட்டியில் கெவின் மெக்பிரைடிடம் தோல்வி அடைந்ததையடுத்து, டைசன் குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்றார்.அதன்பின் காட்சிப் போட்டிக்காக 2020ம் ஆண்டு ராய் ஜோன்ஸ் ஜூனியருடன் டைசன் மோதினார். 

தற்போது முதுகு வலியால் அவதிப்பட்டுவரும் குத்துச்சண்டை சிங்கம் மைக் டைசன், சக்கர நாற்காலியில் வலம் வருகிறார்.

click me!