மெக்ஸிகோ பட்டாசு சந்தையில் விபத்து….சோகமாகிப்போன கிறிஸ்துமஸ் ….

First Published Dec 21, 2016, 8:30 AM IST
Highlights


மெக்ஸிகோ பட்டாசு சந்தையில் விபத்து….சோகமாகிப்போன கிறிஸ்துமஸ் ….


வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைத்து சந்தைகளிலும் புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களை கட்டியுள்ளது.

இந்நிலையில் மெக்ஸிகோ நகரில் இருந்து  45 கிலோ மீட்டர் , தொலைவில் அமைக்கப்பட்டிருந்த  பட்டாசு சந்தையில், வழக்கம் போல கிறிஸ்துமஸ் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது  திடீரென அங்கு நிகழ்ந்த வெடி விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறின. விற்பனையாளர்களும், பொதுமக்களும் நாலா புறமும் சிதறி ஓடினர்.

இந்த விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.இதில்  சிக்கி குறைந்தது 27 பேர் வரை பலியாகி இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக  அப்பகுதி சாலைகளை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பினா நெய்டோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மெக்ஸிகோ சிட்டி பொது மக்களுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சோகமயமாகிவிட்டது.

 

 

tags
click me!