துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக்​கொலை!  கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது மர்மநபர் வெறிச்செயல்..

 
Published : Dec 20, 2016, 07:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக்​கொலை!  கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது மர்மநபர் வெறிச்செயல்..

சுருக்கம்

துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக்​கொலை!  கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது மர்மநபர் வெறிச்செயல்..

துருக்கிக்கான ரஷ்ய தூதர் Andrey Karlov, மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,ஒன்றில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் Andrey Karlov கலந்து கொண்டார். அப்போது, மர்மநபர் ஒருவர் திடீரென Andrey Karlov மீது துப்பாக்கியால் சுட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த Andrey, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்த அந்த மர்மநபர்  துருக்கிக்கு எதிராக ரஷ்யா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டார்.

இந்த சம்பவத்திற்கு, ஐ.நா. பொதுச்செயலாளர் , அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!