Puertorico-வைச் சேர்ந்த 19 வயது மாணவி உலக அழகியாக தேர்வு!

 
Published : Dec 19, 2016, 03:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
Puertorico-வைச் சேர்ந்த 19 வயது மாணவி உலக அழகியாக தேர்வு!

சுருக்கம்

Puertorico-வைச் சேர்ந்த 19 வயது மாணவி உலக அழகியாக தேர்வு!

அமெரிக்‍காவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில், Puerto rico-வை சேர்ந்த 19 வயது மாணவி வெற்றி பெற்றார். அவருக்‍கு, முன்னாள் உலக அழகி மகுடம் சூட்டினார்.

அமெரிக்‍காவின் வாஷிங்டன் நகருக்‍கு அருகேயுள்ள நேஷனல் ஹார்பர் என்ற இடத்தில், இந்த ஆண்டுக்‍கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில், நூற்றுக்‍கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அழகிகள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில், Puerto rico-வை சேர்ந்த 19 வயது மாணவியான Stephanie Del Valle வெற்றிபெற்றார். இந்த அறிவிப்பு வெளியானபோது, அவர் மகிழ்ச்சிக்‍ கடலில் திளைத்தார். அவருக்‍கு, கடந்த ஆண்டின் உலக அழகி மகுடம் சூட்டினார்.

டொமினிக்‍ குடியரசு நாட்டைச் சேர்ந்த அழகி 2-வது இடத்தையும், இந்தோனேஷியாவைச் சேர்ந்த அழகி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!