இந்தோனேசியாவில் ராணுவ விமானம் விபத்து - 13 பேர் பலி

 
Published : Dec 18, 2016, 11:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
இந்தோனேசியாவில் ராணுவ விமானம் விபத்து -  13 பேர் பலி

சுருக்கம்

இந்தோனேஷியா ராணுவ விமானம் ஹெர்குலஸ் சி- 30 விமானம், பப்புவா மாகாணத்தில் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 13 பேர் பலியானார்கள்.

இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் டிமிக்கா என்ற பகுதியில் இருந்து வாமெனா என்ற இடத்தை நோக்கி இன்று காலை உணவுப் பொருட்களை ஏற்றி கொண்டு ‘ஹெர்குலஸ் சி-130’ ரக விமானம் புறப்பட்டது.

அப்போது, வானில் இருந்த மோசமான வானிலை காரணமாக, தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 விமானிகளும், 10 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நொறுங்கி விழுந்த விமானத்தின் உதிரி பாகங்கள் சிதறி கிடப்பதையும், மீட்புபணிகள் நடந்து வரும் காட்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு ஜாக்பாட்! டிட்வா புயல் நிவாரணமாக ரூ.3,700 கோடி நிதியுதவி.. இந்தியா அதிரடி அறிவிப்பு!
வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!