பப்புவா நியூ கினியாவில் உள்ள கடற்கரையில் Globster என்று அழைக்கப்படும் வினோதமான உடல் ஒன்று கரையொதுங்கியுள்ள நிலையில், அது அறிவியல் அறிஞர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விசித்திரமான, வெளிர் மற்றும் சிதைந்த, கடல்கன்னியைப் போன்றது உடல் ஒன்று, கடந்த செப்டம்பர் 20ம் தேதி அன்று, பப்புவா நியூ கினியாவின் பிஸ்மார்க் கடலில் உள்ள சிம்பேரி தீவில் உள்ள மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து நிபுணர்கள் இன்னும் உறுதியான தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால் இது ஒரு மாயமான உயிரினமாக இருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். லைவ் சயின்ஸின் கூற்றுப்படி, இது "குளோப்ஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது, அதாவது கரையோரமாக ஒதுங்கிய அடையாளம் தெரியாத பொருளை அவ்வாறு அழைக்கிறார்கள். மேலும் அதை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ஏனெனில் சடலத்தின் பெரும்பகுதி அழுகியிருக்கிறது, மேலும் கடலில் விழுந்த உடல் பாகங்கள் கிடைக்கவில்லை.
உள்ளூர்வாசிகள் அதை புதைப்பதற்கு முன்பு, சடலத்தின் அளவு மற்றும் எடை குறித்து எந்த தகவலும் எடுக்கப்படவில்லை என்றும். அந்த விசித்திர உடலின் டிஎன்ஏ மாதிரிகளை கூட யாரும் சேகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஹெலன் மார்ஷ், இது ஒரு கடல் பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்காக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதேயிலை ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் கடல் பாலூட்டி நிபுணரான சாஷா ஹூக்கர் பேசும்போது, "இது எனக்கு மிகவும் சிதைந்த Cetacean-யன் போல் தெரிகிறது," என்று அவர் கூறியுள்ளார். Cetaceansகள் என்பது திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் போல கடலில் வாழும் பாலூட்டி இனமாகும்.