மெட்டா தலைவ மார்க் ஜுக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தங்க நிற செயினை அணிந்ததால் கவனம் ஈர்க்கப்பட்டார். சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அது குறித்த ரகசியத்தை இப்போது விளக்கியுள்ளார்.
உலக பில்லினியரும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல சமூக வலைத்தள குழுவின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு தங்க நெக்லஸை அணிந்துள்ளார். இதனால் அவர் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டார்.
இந்நிலையில், அந்த தங்க நெக்லஸ் குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த தங்க நெக்லஸ் என் மகளுக்கானது. இதில் ஒரு பிரார்த்தனை பொறிக்கப்பட்டுள்ளது. என் மகளை தூங்கவைக்கும்போது இந்த பிரார்த்தயை நான் தினமும் அவளுகாக பாடுவேன். அது ஒரு Mi Shebeirach என்று அழைக்கப்படும் யூத பிராத்தனை என கூறியுள்ளார். மேலும், இது அடிப்படையில் ஆரோக்கியம் மற்றும் தைரியத்திற்கான பிராத்தனை என்றும், அது நம் வாழ்க்கையை ஒரு ஆசீர்வாதம் நிறைந்ததாக மாற்றும் என்றும் மார்க் ஜூக்கர்பெர்க் கூறினார்.
டார்க் ஆக்ஸிஜன் என்றால் என்ன? ஆழ்கடலில் 13,000 அடி ஆழத்தில் என்ன நடக்குது? விஞ்ஞானிகள் ஆச்சரியம்!
The story behind Mark Zuckerberg’s latest gold chain…
pic.twitter.com/yLpwOYgp0Z
மேலும் கூறுகையில், மகள் பிறந்தது முதல் ஒவ்வொரு இரவிலும் அவர்களுக்காக இந்த பிரார்தனையை பாடி வருவதாகவும், தன் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாகவும் கூறினார்.
பல சமூக ஊடக பயனர்கள் மார்க் ஜுக்கர்பெர்க்கை தனது நெக்லஸின் பின்னால் உள்ள பொருளைப் பகிர்ந்து கொண்டதற்காகப் பாராட்டியுள்ளனர்.
ஒலிம்பிக் தொடக்க வேளையில் பிரான்ஸில் தாக்குதல்! அதிவேக ரயில் சேவைகள் கடும் பாதிப்பு!