குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ண அப்பா.. அவர்களுக்காக வாங்கிய லாட்டரி - அடிச்சது எத்தனை கோடி தெரியுமா? தலைசுத்துது!

By Ansgar R  |  First Published Jul 21, 2023, 8:26 PM IST

அதிர்ஷடம் ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில், எப்படி அடிக்கும் என்று கணிக்கவே முடியாது என்பார்கள், அதற்கு Wu ஒரு சான்று.


சீனாவின், ஹாங்சூ நகரை சேர்ந்தவர் தான் வு (Wu), வேலை நிமித்தமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிறந்து வாழந்து வருகின்றார் அவர். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்த தேதியை சேர்த்து, அந்த வரிசையில் அண்மையில் சில லாட்டரி டிக்கெட்களை அவர் வாங்கியுள்ளார். மொத்தமாக சுமார் 30 சீன யுவானுக்கு (Chinese Yuan) அவர் பெற்ற லாட்டரி டிக்கெட்டுக்கு தற்போது பரிசு விழுந்துள்ளது.

அதுவும் எவ்வளவு தெரியுமா? சீன யுவான் மதிப்பில் சுமார் 77.1 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 100 கோடிக்கும் மேல் அவருக்கு அந்த பரிசு தொகை விழுந்துள்ளது. இதை கண்டு ஆடிப்போன Wu தற்போது மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகின்றார். 

Tap to resize

Latest Videos

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நான் லாட்டரி சீட்டுக்கள் வாங்கும்போது, என் மனைவி மற்றும் பிள்ளைகளின் பிறந்தநாள் தேதியை கொண்டு வாங்கி வருகின்றேன். அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்ததோடு, எனக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன் என்று கூறியுள்ளார் 35 வயது மதிக்கத்தக்க Wu.

இலங்கையில் நிறுவனத்துடன் அதானி குழுமம் வர்த்தக ஒப்பந்தம்? ரணில், கவுதம் அதானி சந்திப்பு பின்னணி என்ன?

பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தேதிகளை நினைத்து பெரும்பாலான மக்கள் லாட்டரியில் எண்களை தேர்ந்தெடுப்பதாகவும். அவர்களில் பலர் அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்வதாகவும் ஒரு லாட்டரி நிறுவன ஊழியர் தெரிவித்துள்ளார். 
 
இந்த தகவலை குடும்பத்தோடு பகிர்ந்துகொண்ட Wu, இவ்வளவு பெரிய தொகையை கொண்டு என்ன செய்வது என்று தற்போது யோசித்து வருவதாக கூறியுள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில் இன்னமும் லாட்டரி விற்பனை இருந்துவந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ட்ரில்லர் வைத்து தலையில் சர்ஜரி.. தனக்கு தானே ஆபரேஷன் செய்துகொண்ட நபர் - இறுதியில் நடந்து என்ன?

click me!